(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

அங்கு கிச்சனில் சோனாவை பார்த்த பாட்டி அவளையும்

   

”இங்க வா நீயும் வந்தனாவும் இந்த வேலையை செய்ங்க சீக்கிரம்” என கட்டளையிட அவள் பார்த்தாள். வந்தனா ஏற்கனவே மாவை ஜலித்துக்கொண்டிருந்தாள். அந்த இடமே புகை மூட்டம் போல இருக்க அந்த நெடியில் சோனாவினால் ஒரு நிமிடம் கூட அங்கே இருக்க முடியாது என தோன்ற அவள் திரும்பி நந்தினியை பார்க்க அவளோ காபி போட சென்றுவிட்டாள். சோனா நந்தினியை பார்ப்பதைப் பார்த்த பாட்டியும் நந்தினியிடம்

   

”இதப்பாரு பொண்ணே இங்க வா இந்த வேலையை செய் சீக்கிரமா முடிக்கனும்” என்றார் அதற்கு நந்தினி

   

“சாரி பாட்டி தாத்தா காபி போட சொல்லியிருக்காரு நான் போட்டு கொடுத்துட்டு 10 நிமிஷத்தில வந்துடுவேன் அதுக்கப்புறம் உங்க வேலையை நான் செய்றேன்”

   

“அதெல்லாம் வேலைக்காரங்க செய்வாங்க முதல்ல நான் சொன்ன வேலையை செய்”

   

“சாரி பாட்டி நான் ஏற்கனவே காபி போடறேன்னு தாத்தாகிட்ட ஒத்துக்கிட்டு வந்துட்டேன் அவரும் என்மேல நம்பிக்கையா இருக்காரு. ஒத்துக்கிட்ட பின்னாடி செய்யாம போனா  நம்பிக்கைக்கு பாதகமா முடியும் காபிதானே எவ்ளோ நேரம் ஆயிடும் 10 நிமிஷம்தானே பாட்டி உடனே முடிச்சிட்டு வந்து நீங்க சொல்ற வேலையை செய்றேன்” என சொல்லவும் பால் சூடாகிவிட அவள் காபி தூள் போட்டு கலந்து சக்கரை அனைத்தும் போட்டு காபி கப்களில் ஊற்றி ஒரே டிரேயில் அடுக்கி எடுத்துக்கொண்டு திரும்ப பாட்டி குறுக்கே வந்தார்

   

”நான் இந்த வீட்ல யார்ன்னு தெரியும்ல என்னோட பேச்சை கேட்காம எதிர்த்து பேசறியா”

   

“இல்லை பாட்டி நான் உண்மையை பேசறேன் வந்தனாவும் தாத்தாக்கு காபி தர்றதா சொல்லிட்டு வந்தாளாம் ஆனா காபி தரலையாம் அதனால என்கிட்ட சொன்னாரு நானும் தரலைன்னா தப்பா நினைச்சிக்குவாரு. அதோட நான் உங்க வேலையை செய்யமாட்டேன்னு சொல்லலையே இதை கொடுத்துட்டு வந்து உங்க வேலையை செய்றேன் பாட்டி வழிவிடுங்க” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.