என அமைதியாக அடக்கமாக நந்தினி பேசவும் பாட்டி கோபமாக அவளுக்கு முன் வெளியே செல்ல நந்தினியும் சிரித்துக்கொண்டே வெளியே சென்றாள்.
வந்தனாவிற்கு நடப்பதைப்பார்த்து தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்தவள் செய்யும் வேலையை பாதியில் விட்டுவிட்டு எழுந்து நடப்பதை வேடிக்கை பார்க்க ஹாலுக்கு பாட்டிக்கு பின்னாலேயே சென்றாள். அவர்கள் சென்றதும் சோனா நிம்மதியாகி கிரீன் டீ போட ஆரம்பித்தாள்.
சோபாவில் அமர்ந்திருந்த தாத்தா ரிஷியிடம்
”என்னடா இது வந்தனா போயி அரை மணி நேரமாகுது காபி கொண்டு வரலை நந்தினி போய் 10 நிமிஷம் ஆகுது இவளும் காபியோட வரலை. மிருதுளா நமக்கு காபி தர்றமாதிரியே தெரியலை சோனா அவளுக்காக மட்டும் டீ போட போயிருக்கா இப்ப நமக்கு காபி வருமா இல்லை காபியை மறந்துடலாமா” என தாத்தா கேட்க அதற்கு ரிஷி
“நந்தினியை பத்தி விடுங்க அந்த வந்தனாகிட்ட ஒரு விசயத்தை சொன்னா இவ்ளோ நேரம் எடுத்துக்கறாளே அவளுக்கு காபி போட வருமா வராதா தாத்தா”
“வரும்னுதானே போட போனா”
“இவ்ளோ லேட் பண்றாளே தாத்தா”
“அதான் புரியலை நம்ம வீட்டு கிச்சனுக்குள் என்னதான் நடக்குது”
“இவள்ட்ட காபி கேட்டதுக்கே இவ்ளோ நேரம் எடுத்துக்கறாளே சாப்பாடு கேட்டா எவ்ளோ நேரம் எடுத்துக்குவா. இனிமே 3 மணி நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பாட்டை ஆர்டர் பண்ணனும் போல” என அவன் அலுத்துக்கொண்டு சொல்லும் போதே கிச்சனிலிருந்து வெளியே ஹாலுக்கு முதலில் வந்த பாட்டி தாத்தாவிடம் நின்று சத்தம் போட்டார்
”என்னை அவமானப்படுத்தற மாதிரியே எல்லாரும் நடந்துக்கிட்டா எப்படி”