(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

உடனே 

   

”என்ன வேணும் எதுக்கு இங்க வந்திருக்க சரி சரி வா நீ வந்ததும் நல்லதா போச்சி இந்தா இந்த வேலையை செய்” என அவளுக்கு வேறொரு வேலையை தர தாத்தாவிற்கு காபி கொடுக்க வேண்டிய வேலையை விட பாட்டியை தன் பக்கம் இழுப்பது மேல் என உணர்ந்த வந்தனாவும் பாட்டி சொன்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். 

   

நேரம் ஆக ஆக காபி வராமல் போகவே தாத்தாவிற்கு கஷ்டமாகி போனது. அந்நேரம் நந்தினி வந்தாள். நேராக தாத்தாவிடமும் ரிஷியிடமும் வந்து நின்றாள். நந்தினியை பார்த்த உடனே ரிஷிக்கு சந்தோஷம் அதிகமானது அவன் ஆசையாக அவளைப்பார்த்து சிரிக்க அவளும் சிரித்துவிட்டு தாத்தாவிடம்

   

”தாத்தா” என பாசமாக அழைக்க

   

”என்னம்மா லேட்டு”

   

“சாரி தாத்தா நான் என் லக்கேஜ் எல்லாம் அலமாரியில அடுக்கி வைச்சிட்டு வந்தேன்.”

   

அதற்குள் சோனாவும் அங்கு வர

   

“எதுக்கு லக்கேஜ் அடுக்கி வைக்கனும் வேலைக்காரங்க கிட்ட சொன்னா செய்யப்போறாங்க” என்றாள் மிருதுளா

   

”இல்லை என் வேலையை நானே செஞ்சிதான் பழக்கம்”

   

என அவள் சொல்லவும் அவளை விட்டு தாத்தாவை பார்த்தாள்

   

”தாத்தா என் லக்கேஜ் அப்படியே இருக்கு வேலைக்காரங்க அடுக்கிடுவாங்களா” என்றாள் சோனா

   

“கண்டிப்பா செய்வாங்கம்மா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.