“எதை சொல்ற” என்றார் தாத்தா
“எதையா அந்த அர்ஜூன் கூட்டிட்டு வந்தானே அந்த பொண்ணு என்னை கொஞ்சமும் மதிக்கலை”
”அப்படியா” என சந்தேகமாக கேட்கவும் அதற்குள் நந்தினி வந்து காபி தர தாத்தா காபி எடுத்துக்கொண்டார்.
பாட்டியின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் வெளியே வர அவர்களுக்கும் காபி தந்துவிட்டு 2 கப் காபியுடன் பாட்டி முன் வந்து நின்றாள் அதைப்பார்த்து முறைத்து காபியை தொடாமல்
“என்னை மதிக்காம பேசின இப்ப நீ தர்ற காபியை நான் மதிச்சி எடுத்துக்கனுமா முடியாது” என சொல்லவும் அவள் தாத்தாவை பார்த்தாள். அவளின் பார்வையைக்கண்ட தாத்தாவும்
”என்னம்மா ஆச்சி” என கேட்க
”தாத்தா நான் காபி போட போனேன் அங்க வந்தனா மாவு ஜலிச்சிட்டு இருந்தா பாட்டி சோனாவையும் அந்த வேலையை செய்ய சொன்னாங்க. இதுல நான் உங்களுக்கும் மத்தவங்களுக்கும் காபி போடறதுக்காக பாலை கூட வைச்சிட்டு இருந்தேன். அந்நேரம் பாட்டி என்னையும் மாவு ஜலிக்க கூப்பிட்டாங்க. நான் சொன்னேன் காபி போட்டு உங்களுக்கு கொடுத்துட்டு உங்க வேலையை செய்றேன் மிஞ்சி போனா 10 நிமிஷம்தான் ஆகும் பாட்டின்னு சொன்னேன் ஆனா நான் சொன்னதை பாட்டி தப்பா புரிஞ்சிக்கிட்டு கோச்சிக்கிட்டாங்க” என அவள் உண்மையை சொல்லவும் தாத்தா பாட்டியை பார்த்து கோபமாக
”உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க இந்த 4 பொண்ணுங்களும் இங்க வந்தது உன் வேலைகளை செய்றதுக்காக இல்லை நான் சொல்றதை செய்றதுக்காக அவங்களுக்கு நீ எப்படி வேலைகளை தரலாம் வேலைக்காரங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே” என கோபமாக பேசினார் தாத்தா