கொடுக்கறதாயிருந்தா”
“இதுக்கு என்ன அர்த்தம்”
“வேலைகளாகட்டும் பொறுப்புகளாகட்டும் ஆண் பெண் அதாவது கணவன் மனைவிக்கு சமமான ஒண்ணுதானே தாத்தா”
“புரியுது அதுக்காக ரிஷி செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது. இந்த வீம்பு வேணாம். அவனை கட்டாயப்படுத்த நினைக்க கூடாது. அவன்கிட்ட அன்பு காட்டினாலே அவனே உனக்காக எல்லாம் செய்வான் அதுக்காக நான் செஞ்சேனே நீ செஞ்சா என்னன்னு பேசறது ஏதோ பிசினஸ் டீலிங் போல இருக்கும். வெளிய தான் கம்பெனியிருக்கு அங்கதான் டீலிங் பேசனும் இது வீடு இங்க அப்படியிருக்க கூடாது. வீட்ல இருக்கறப்ப அவனுக்கு நீ ஒரு நல்ல மனைவியா நடந்துக்கிட்டா அவனும் உன்கிட்ட நல்ல கனவனா நடந்துக்குவான்” என சொல்ல சோனாவும்
”சாரி தாத்தா நான் இந்த கோணத்தில யோசிக்கலை” என சொல்லவும் தாத்தா மிருதுளாவைப்பார்த்தார்
”அருந்ததி கூட்டிட்டு வந்துட்ட காரணத்தால நீ இப்படி அதிகாரமா இருக்கறது தப்பு. அருந்ததி கூட இந்த வீட்ல ஒரு மருமகள்தான். அவளும் மருமகளா சில கடமைகளை செஞ்சிருக்கா. உன்னை மாதிரி அடுத்தவங்க செய்யட்டும்னு அமைதியா உட்காரமாட்டா. அவள் அதிகாரம் செஞ்சாலும் அதுக்காக அவளோட கடமைகளை அவள் கைவிட்டதில்லை எல்லா பொறுப்புகளையும் அவள் நிறைவேற்றியிருக்கா.
அவளை போல இருக்க ஆசைப்படற நல்ல விசயம் தான் அவளை போல அதிகாரமா நடந்துக்கறது தவிர அவளை போல எல்லாருக்கும் வேலை செய்றது கடமைகளையும் பொறுப்புகளையும் சரியா கவனிக்கறது இதையெல்லாம் நீயும் செய்யனும். அப்பதான் உன்னை கூட்டிட்டு வந்ததுக்காக அவளும் பெருமைப்படுவா புரியுதா” என சொல்ல மிருதுளாவும் பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு தலை யாட்டி
”சாரி தாத்தா இனிமே நானும் நல்ல மருமகளா இருக்கப்பார்க்கறேன்” என சொல்லி