(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

அவர் சென்றதும் நந்தினி தன் கையில் இருந்த 2 காபி கப்களை பார்த்தாள். அதில் ஒன்றை தனக்காக எடுத்துக்கொண்டு இன்னொன்றை ரிஷியிடம் கொடுக்க வந்தாள். அவனோ

   

”ஆங் இரு நந்தினி நான் இன்னும் குளிக்கலை நான் குளிச்சிட்டு வந்துடறேன் அப்புறமா காபி கொடு”

   

“சரி நான் போய் சூடு பண்ணிக்கொண்டு வரேன் அத்தான்” என சொல்ல அவனும்

   

“சரி” என சொல்லிவிட்டு ரிஷி தன் அறைக்கு செல்ல அவன் எந்த அறைக்கு செல்கிறான் என பார்த்துக்கொண்டு தனக்கான காபியை குடித்துவிட்டு ரிஷிக்கான காபியை திரும்பவும் சுட வைக்க கிச்சனுக்குள் சென்றாள் நந்தினி. 

   

அங்கு சுசித்ரா ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து பெண்கள் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்த்து வைத்துக்கொண்டிருந்தார். வந்தனா அவசரமாக வேர்க்க விறுவிறுக்க வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள். 

   

அவள் வீட்டில் இருக்கும் அனைவரும் தன்னை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சுசித்ராவிடம் கேட்டு மாவு எடுத்து இட்லி தோசை பூரி சப்பாத்தி என செய்து அதற்கான சைட் டிஷ்களையும் செய்துக்கொண்டிருந்தாள்

   

சோனா ஏதோ பாஸ்தா செய்யவும் மிருதுளாவுக்கு நான்வெஜ் இல்லையென்றால் அவளால் சாப்பிடவே முடியாத என்ற நல்ல குணத்தில் வளர்ந்த காரணத்தால் காலையிலேயே மீனை வைத்து ஏதோ அசைவ டிஷ் செய்துக்கொண்டிருந்தாள். 

   

தனக்காக ஒதுக்கிய அடுப்பில் மறுபடியும் காபியை சூடு செய்தவள் இம்முறை பாலை சுண்ட காய்ச்சி அதன் மீது எழுந்த நுரையை சேகரித்து அதை காபியின் மீது அழகாக வைத்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு ரிஷியை காண அவன் அறைக்கு சென்றாள்.

   

குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.