Page 21 of 32
அவள் சென்றதும் அர்ஜூன் போன் செய்தான் ரிஷிக்கு. அதைப்பார்த்து நொந்தான் ரிஷி
”அடப்பாவி எப்படிடா உனக்கு மட்டும் உடனே மூக்கு வேர்த்து போய் போன் பண்ற சே இவனோட தங்கச்சியைதான் நான் விரும்பனுமா” என நொந்துக்கொண்டே போன் ஆன் செய்தான்
”அண்ணா” என கத்தினான் அர்ஜூன்
“ஏன்டா கத்தற”
“தங்கச்சி எப்படியிருக்கா”
“சூப்பராயிருக்கா”
“அண்ணா” என கத்தினான்
”என்னடா”
“வில்லங்கமா பேசாதீங்கண்ணா இன்னும் கல்யாணம் ஆகலை அதை மறந்துடாதீங்க”
“நான் மறக்கலை போதுமா காலையில சுட சுட காபி கொடுத்தா அதை சொன்னேன்”
“ஓ அப்படியா சரி சரி தங்கச்சி பத்திரம்ணா”
“சரிடா சித்திக்கிட்ட அவள் பத்திரமா இருப்பா”
“சரி தங்கச்சி என்ன செய்றாள்ணா”
“தாத்தா 4 பொண்ணுங்களையும் டிபன் செய்ய சொல்லி அனுப்பிவைச்சிட்டாரு”