(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தாத்தா அதற்கு மேல் அவள் யாருக்கும் பாஸ்தாவை பரிமாறி விடக்கூடாதென முன்னெச்சைரிக்கையுடன்

   

”என்னம்மா இது” என கேட்க அவள் சிறிது கலவரத்துடன்

   

”தாத்தா இது பாஸ்தா” என சொல்ல ரிஷி அந்த அற்புத கோந்து பாஸ்தாவை பார்த்து சிரித்தான்

   

”இதைப்பார்த்தா பாஸ்தா மாதிரியில்லை ஏதோ ஒட்டற கம்மு போல இருக்கே என்னாச்சி இதுக்கு” என அக்கறையாக தாத்தா விசாரிக்க 

   

”சாரி தாத்தா அது பாஸ்தா ஆறிபோய் காய்ஞ்சி போய் இப்படியாயிடுச்சி”

   

“ஏம்மா உனக்கு பாஸ்தா செய்ய தெரியாதா”

   

“இல்லை தாத்தா எனக்கு நல்லாவே தெரியும் எனக்கு புடிச்ச பேவரிட் புட் இது. ஆனா எப்படி இப்படியாச்சின்னு தெரியலை”

   

என சொல்ல ரிஷி அவளிடம்

   

”பாஸ்தா எப்பவுமே சூடா இருந்தாதான் சாப்பிட நல்லாயிருக்கும் ஆமா  இதை செஞ்சி எவ்ளோ நேரம் ஆச்சி”

   

“அது ஒரு மணி நேரம் ஆச்சி” என்றாள் சோனா

   

“அதான் இப்படி கோந்து மாதரியாயிடுச்சி இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் சூடாதான் இருக்கனும்” என ரிஷி சொல்லவும் தாத்தா சோனாவின் மனதை நோகாமல் பேசினார்

   

”இங்க பாரும்மா எந்த டிஷ் சூடா இருந்தா நல்லாயிருக்குமோ அதை நீ சாப்பிடறதுக்கு கால்மணி நேரம் முன்னாடி செஞ்சிருக்கனும் சரியா.”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.