(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சிறிது கலக்கம் அடைந்தாலும் அதை பெரிய குறையாக எடுத்துக்கொள்ளாமல் இயல்பாக இருந்தாள். வந்தனாவின் சமையலை மற்ற அனைவரும் பாராட்டினார்கள். அதில் அவள் இன்னும் வானத்தில் ரெக்கையில்லாமலே பறந்து சென்றாள்.

   

சாப்பிட்ட அனைவரும் தாத்தாவை பார்க்க

   

அவர் உடனே அடுத்து இருந்த மிருதுளாவை பார்த்து சைகை செய்ய அவள் தான் செய்த மீன் கிரேவி மட்டும் எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் வந்து பரிமாற அவர் அவளை கேள்வியுடன் பார்த்தார்.

   

”என்னாச்சி தாத்தா ஏன் இப்படி பார்க்கறீங்க” என மிருதுளா கேட்க அதற்கு தாத்தா

   

“இல்லைம்மா கிரேவி கொண்டுவந்திருக்க சரி இந்த கிரேவியில் கலந்து சாப்பிட ஏதாவது செஞ்சிருக்கியா இட்லி தோசை அப்படி ஏதாவது”

   

“இல்லை தாத்தா நான் கிரேவி செய்றப்பவே வந்தனா செய்றத பார்த்தேன் அதிகமா இட்லியும் தோசையும் செஞ்சிருந்தா அதான் நான் இதை மட்டும் செஞ்சேன்”

   

“ஆக ஒன்றரை மணி நேரத்தில நீ கிரேவி மட்டும்தான் செஞ்ச சரி ஆனா அதோட நீ செஞ்ச கிரேவியோட அளவு குறைவா இருக்கே இது எப்படி எங்க எல்லாருக்கும் பத்தும் அதோட நீயும் கூட சாப்பிடனும் வந்தனா செஞ்ச இட்லி எடுத்துக்கலாம்னு வை இருந்தாலும் அது தப்புதானே இது போட்டி நீ எதுக்கு மத்தவங்க செய்றத பார்க்கற உன் திறமையைதான் நீ காட்டனும் இப்ப எதுவுமே இல்லைன்னு வெச்சிக்கலாம் அப்ப வெறும் கிரேவியை நாங்க எப்படி சாப்பிடறது எங்களை விடு வெறும் கிரேவியை நீ எப்படி சாப்பிடுவ அதை யோசிச்சியா”

   

“அதுக்கில்லை தாத்தா எப்படியும் வந்தானாவோடது மிச்சமாகுமே நாம ஏன் செஞ்சி வேஸ்டா போகுமேன்னு”

   

“அந்த கவலை உனக்கு வேணாம்மா இங்க வேலைக்காரங்களும் இருக்காங்க மிச்சம் ஆனா அவங்க சாப்பிடுவாங்க இப்ப வந்தனா செஞ்ச அதிகப்படியான சமையல் கூட எங்களுக்கு போக மிச்சம் வேலைக்காரங்களுக்குதான் போகப்போகது. ஆனா அதுக்காக நீ எதுவும் செய்யாம 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.