“என்ன விசயம் சொல்லு”
“அது நந்தினியை குறை சொல்லாம திட்டாம இருங்க”
“ஏன்”
“அங்க பாருங்க அவளோட கையில சின்ன சின்ன கின்னங்கள்தான் இருக்கு இப்பவே 3 பொண்ணுங்களையும் டோஸ் விட்டீங்க இதுல இவளையும் திட்டிடாதீங்க அவள் அழுதுடுவா அதைப்பார்த்தா எனக்கு கஷ்டமாயிடும்“ என்றான் கவலையோட
”இதப்பாருடா இது போட்டி இங்க நான் எப்படி வேணும்னாலும் நடந்துக்குவேன் உனக்காக நான் மாறமாட்டேன். இப்படியே அவளுக்கு நீ சப்போர்ட் பண்ணா நான் அவளை வெளியே விரட்டிடுவேன் புரியுதா”
“சரி தாத்தா ஆனா திட்டறத கொஞ்சம் குறைச்சிடுங்க அது போதும்” என சொல்ல அவரும் அவனை விட்டு நந்தினியை பார்த்தார்
”வாம்மா நந்தினி வா நீ செய்த டிஷ்ஷை பரிமாறு” என சொல்ல அவளும் அமைதியாக அவரிடம் வந்து தான் செய்ததை முதலில் காட்டினாள்
களியும் கீரை குழம்பும் இருக்கவே தாத்தா கண்கள் விரிய சந்தோஷப்பட்டார்.
”ஆஹா களி செஞ்சிருக்கியா சூப்பர்மா”
“சாரி தாத்தா என் வீட்ல காலையில களிதான் செய்வாங்க”
“பரவாயில்லைம்மா எத்தனை வருஷமாச்சி இந்த களியை பார்த்து. சின்ன வயசில நானும் களிதான் சாப்பிடுவேன் சரி சரி பரிமாறும்மா”