(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”சாரி தாத்தா நான் இதை யோசிக்கலை”

   

“பரவாயில்லைம்மா இனிமே இந்த மாதிரி டிஷ்கள் செய்றப்ப கொஞ்சம் பார்த்து செய் சரி நீ போய் ஒரு சேர்ல உட்காரு” என சொல்லிவிட்டு தன்னுடைய பிளேட்டை பக்கத்தில் இருந்த வேலைக்காரனிடம் கொடுத்துவிட்டு புதிய பிளேட்டை வாங்கி வைத்துக்கொண்டார். சோனாவும் நேராக தினகரன் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டாள்.

   

அடுத்து தாத்தா வந்தனாவை பார்த்தார். அவளோ வேர்த்து விறுவிறுத்து ஏதோ 100 கி.மீ ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டவளைப்போல இருந்தாள்.

   

”என்ன வந்தனா என்னாச்சி ஏன் இப்படியிருக்க” என பதட்டமாக கேட்டார் தாத்தா

   

“அது தாத்தா டிபன் செய்ய டைம் போதலை அதான்” என்றாள் வந்தனா

   

“ஓ சரிம்மா எல்லாத்தையும் செஞ்சிட்டு குளிச்சிட்டே வந்திருக்கலாமே பாரு எப்படி வேர்த்திருக்கன்னு பாரு”

   

“சாரி தாத்தா அதுக்கும் நேரம் கிடைக்கலை அதுக்குள்ள எல்லாரும் வந்துட்டீங்க”

   

“அப்படி என்னம்மா செஞ்ச வா வந்து பரிமாறு” என சொல்ல அவளும் தான் செய்ததை முதலில் தாத்தாவின் பிளேட்டில் பரிமாற ஆரம்பித்தாள். அவருடைய டிபன் பிளேட் சிறியது அதில் 2 இட்லி 2 தோசை 2 சப்பாத்தி 2 பூரி வைத்துவிட்டு அந்த பிளேட்டிற்கு பக்கத்தில் 4 சிறிய கிண்ணங்களில் கிரேவி சட்னி குழம்பு உருளைக்கிழங்கு என பெரிய கரண்டியில் மொண்டு மொண்டு ஊற்றி அடுக்கினாள். தழும்ப தழும்ப இருந்ததை பார்த்து

   

”எதுக்கும்மா இவ்ளோ செஞ்ச நான் ஒரு டிஷ்தானே செய்யச் சொன்னேன்”

   

“பரவாயில்லை தாத்தா என்னால எல்லாமே செய்யமுடியும்”

   

“ஒத்துக்கறேன் நீ எல்லாமே கத்துக்கிட்டதான் சரி அதுக்காக முதல் நாள்லயே இப்படியா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.