செய்யனும் அதனாலதான் உனக்கு நேரம் போதலை. அதோட இங்க நாங்க கொஞ்ச பேர்தான் இருக்கோம் நீ செஞ்சிருக்கறத பார்த்தா அதிகமாயிருக்கே”
“எதுக்கும் இருக்கட்டும்னுதான் தாத்தா ஒருவேளை பத்தாம போனா என்னாகிறது அதான்”
“அதுவும் சரிதான் ஆனா ஒரு விசயத்தை நீ மறந்துட்ட இங்க நீ மட்டும் சமைச்சிருந்தா பரவாயில்லை உன் கூட மீதி பொண்ணுங்களும் சமைக்கறாங்க அவங்க சமைச்சதும் நாங்க சாப்பிடனும் அதுக்கு எங்க வயிறு காலியாயிருக்கனும்ல இப்படி என் பிளேட் முழுக்க இவ்ளோ அடுக்கினா அடுத்தவங்களோடதை எப்படி சாப்பிடுவேன்.
நான்தான் அப்பவே சொன்னேனே இந்த வீட்ல எவ்ளோ பேர் இருக்காங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சமைக்கனும்னு இப்ப நீ நல்ல பேர் எடுக்கனும்ங்கறதுக்காக அதிகமாக செஞ்சி வச்சிருக்க இதுல உன்னோட சிக்கனம் தெரியலையேம்மா.
ஒரு மருமகளா எல்லா விசயத்திலயும் நீ தாராளமா இருந்தா எப்படி சொல்லு விரயம்தானே ஆகும். இதோ இப்ப நடந்த மாதிரி. நீ சிக்கனமா இருந்தாதானே வீட்டை நல்லபடியா பார்த்துக்க முடியும் இல்லைன்னா கஷ்டமாச்சே சரி விடு இது முதல் முறைதானே இனிமே இவ்ளோ அதிகமா செய்யாத. உன்னோட சேர்த்து மத்தவங்களோட சமையலையும் சாப்பிடனும் புரியுதா இனிமேல பார்த்து பக்குவமா சிக்கனமா சமைக்க பாரு”
“அது தாத்தா வந்து” என தடுமாறினாள் வந்தனா அவளது பேச்சைத்தடுத்த தாத்தா அவளுக்கு ஆறுதலாக பேசினார்.
“சரி பரவாயில்லை நீ மத்தவங்களுக்கு பரிமாறும்மா ரிஷிக்கு என்னோடதுல பாதி கொடுத்துடறேன் நீ மத்தவங்களை பாரு” என தாத்தா சொல்ல அவளும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு ஒரு சேரில் அமர்ந்துக்கொண்டாள். ரிஷிக்கு தாத்தா தன் பிளேட்டில் இருந்து அதிகப்படியானதை தந்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். சாப்பாடு நன்றாகவே இருந்தது.
”ரொம்ப நல்லாயிருக்குமா காரம் உப்பு அளவுகள் எல்லாம் சரியா இருக்கு” என சொல்லவும் வந்தனாவிற்க்கு சந்தோஷம் அதிகமாகி அவளும் தனக்காக பரிமாறாமல் அடுத்து பெண்கள் செய்வதை காண்பதற்காக காத்திருந்தாள். சோனாவும் வந்தனாவின் சமையலை சாப்பிட்டு