“நல்லாயிருந்துச்சி”
“அதே மாதிரிதான் சமையலும் நல்லாயிருக்கும் பாருங்க எப்படியும் அவள்தான் ஜெயிப்பா”
“அதையும் பார்க்கலாம்” என அவர் பேப்பரை படிக்க ஆரம்பிக்க ரிஷியும் அவருடன் சேர்ந்து பேப்பரை படிக்கலானான்.
சோனாவோ வேகமாக பாஸ்தாவை செய்துவிட்டதால் அவள் செய்த டிஷ்ஷை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தன் கம்பெனி வேலையை பற்றி தெரிந்துக்கொள்ள கம்பெனி மேனேஜரிடம் போனில் பேச தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
மிருதுளாவும் மீனை வைத்து கிரேவி போல் செய்துவிட்டாள். அந்த கிரேவிக்கு மெயின் டிஷ் என்ன செய்வது என யோசித்தவள் பக்கத்தில் வந்தனா இட்லி தோசை பூரி என விதவிதமாக அதிகமாக செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள்
”இவளே இவ்ளோ செய்றா நாம வேற புதுசா இட்லி தோசை செய்தா மீதமாகும் வேணாம் இவளது வெச்சி நம்ம கிரேவியை சாப்பிட்டுக்கட்டும்” என நினைத்துவிட்டு அவளும் தன்னுடைய டிஷ்ஷை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தன் ப்ரெண்ட்ஸ்களுக்கு பேஸ்புக்கில் சேட்டிங் செய்ய சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் சென்றதால் அவர்களின் அடுப்பையும் எடுத்துக்கொண்டு டிபன் செய்துக்கொண்டிருந்தாள் வந்தனா.
நந்தினி மற்ற பெண்கள் செய்ததை கவனித்துவிட்டு ஆழமாக யோசித்தாள்.
”இவங்களே அதிகமா செய்திருக்காங்க இதுக்கு மேல நாமளும் செய்தா மிச்சமாயிடும் சிம்ப்ளா செய்யலாம்” என யோசித்தவள் பிரிட்ஜிடம் செல்ல அங்கு கீரையும் நேற்று இரவு மிச்சமான சாதமும் இருக்கவே அவள் சுசித்ராவிடம் வந்தாள்
”அத்தை ராகி மாவு எங்க இருக்கு” என கேட்க அவரும் அவளை விநோதமாக பார்த்துவிட்டு எடுத்தும் கொடுத்தார்.