அதை வாங்கியவள் ராகி களியும் கீரையை கடைந்து குழம்பும் செய்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு நேராக தாத்தாவிடம் வந்து எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டாள். அவள் அமர்ந்ததும் ரிஷியும் சிரித்தவாறே அவளிடம் பேச ஆரம்பிக்க அதை தடுத்து தாத்தா அவளிடம் பேசினார்.
நந்தினியோ தன் கிராமத்தின் பெருமையை அளக்க தாத்தா அவர் பிறந்த கிராமத்தின் பெருமையை அளக்க ரெண்டு பேரும் பேசுவதை கேட்டு நொந்து போனவன் தனக்கென்ன வந்தது என நினைத்துக்கொண்டு நந்தினியை சைட் அடிக்க ஆரம்பித்தான்.
நேரமாகியது மணி 9.30 என காட்டவும் அதற்குள் வீட்டில் இருந்தவர்களும் ரெடியாகி டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்துவிட்டார்கள்.
தலைமையிடத்தில் தாத்தாவும் அவரது வலது புறம் எப்போதும் ரிஷி அமர்ந்திருப்பான் இடது புறம் பாட்டியும் அமர்ந்திருப்பார்கள். இன்று மட்டும் பாட்டிற்கு பக்கத்தில் மோகனசுந்தரம் அவருக்கு அடுத்து பவித்ராவும் அமர்ந்திருந்தார்கள். ரிஷிக்கு பக்கத்தில் அவனுடைய சித்தப்பா கேசவமூர்த்தியும் சித்தி சுசித்ராவும் அவரது 2 மகன்களான கருணாவும் தினாவும் அமர்ந்திருந்தார்கள்.
4 பெண்களும் அமராமல் தாத்தாவிற்கு எதிரே அவரது ஆணைக்காக காத்து நின்று கொண்டிருந்தார்கள்.
தாத்தாவும் அனைவரும் வந்ததை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு முதலில் சோனாவை பார்த்தார்
”வாம்மா சோனா நீதானே இந்த வீட்டுக்கு முதல்ல வந்த வா நீ செஞ்ச டிபனை எல்லாருக்கும் பரிமாறு” என சொல்ல அவளும் தான் ஒரு மணி நேரத்திற்கு முன்பு செய்த பாஸ்தா கிண்ணத்தை எடுத்துக்கொண்டு முதலில் தாத்தாவிடம் வந்தாள்.
மூடியை திறந்து ஒரு கரண்டியால் பாஸ்தாவை எடுக்க பார்க்க அதுவோ கோந்து போல ஒட்டிக்கொண்டது. மிகவும் சிரமப்பட்டு அதை தாத்தாவிற்கு பரிமாறினாள். அதைப்பார்த்த