“அப்புறம் என்ன அவ்ளோ தான்”
என அவன் சொல்லவும் முகம் வாடிப்போய் தலை குனிந்தவளைப்பார்த்து
”ஓய் என்னாச்சி பயந்துட்டியா”
“ம்ஹூம்”
“அப்புறம் என்ன சொல்லு என்ன வேணும்னு சொல்லு”
என அவன் சொல்ல தலையை தூக்கி அவனை ஏறிட்டு பார்த்து சிரித்தவள்
”அத்தான்” என வில்லங்கமாக ரிஷியை அழைத்தவளை புருவங்கள் உயர்த்தி சந்தேகத்துடன் பார்த்தான்
”என்னம்மா ஒரு மாதிரியா கூப்பிடற”
“இன்னிக்கு முதல் நாள் நான் இந்த போட்டியில ஜெயிக்கனும்ல”
”சரி அதுக்கு”
”ஏதாவது தந்தா நல்லாயிருக்குமே அத்தான்”
“என்ன வேணும்னு கேளு தரேன்”
என அவன் கேட்க அவள் வெட்கப்பட்டு அவனை நெருங்கி தன் கன்னத்தை காட்டவும் உடனே புரிந்துக்கொண்டவன் ஆசையாக அவள் கன்னத்தில் முத்தம் தர அதில் மிகுந்த சந்தோஷமடைந்தவள் அவனை பார்த்து சிரித்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றாள்.