(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

முடிக்கவும் தாத்தா நந்தினியை பார்த்தார்

   

”நந்தினி உன் கடமை பொறுப்புகள்ல இருந்து விலக கூடாதுன்னு நீ நினைச்சி செய்றது சரி ஆனா உன்னை விட பெரியவங்களையும் நீ மதிக்கனும் அவங்க கிட்ட இப்படி ரூல்ஸ் பேசக்கூடாது. பொறுமையா எடுத்து சொல்லியிருக்கலாம். முதல் நாளே இந்த வீட்ல இருக்கறவங்களோட வெறுப்பை சம்பாதிக்காத”

   

“சாரி தாத்தா நான் உங்களுக்கு காபி போட்டு கொடுக்கனும்ங்கற வேலையை ஒத்துக்கிட்டேன் அதுல இருந்து ஒதுங்கிட்டா நீங்க என் மேல வைச்ச நம்பிக்கை போயிடுமேன்னுதான் யோசிச்சேன்”

   

“யோசிச்ச விசயம் நல்ல விசயம் ஆனா அருந்ததி சொன்னதும் அவள் கூட நீ வாதாடியிருக்க கூடாது. வயசுக்கு மரியாதை கொடுத்திருக்கனும் நான் நேத்தே சொன்னேன்ல என்னோட விதிகளைப்பத்தி அதுல தெளிவா சொல்லியிருக்கேனே அருந்ததி வேலை செய்ய சொல்றாளா உடனே என்கிட்ட சொல்லியிருந்தா நான் தடுத்திருப்பேன் அதை விட்டுட்டு பெரியவங்களை மதிக்காம பேசறத தப்பு. என் நம்பிக்கையை காப்பாத்த நினைச்ச நீ பெரியவங்களை மதிக்கற பண்பை மறந்துட்ட பரவாயில்ல புதுசுதானே போக போக சரியாயிடும்” என சொல்ல நந்தினியும்

   

”சாரி தாத்தா இனிமேல இப்படி நடக்காது. நீங்க சொன்ன விதிகளையே நான் பாலோ பண்றேன் இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க ஒரே சமயத்தில ரெண்டு வெவ்வேறு பிரச்சனைகள் வரவும் அதுல எது முக்கியமோ அதை நான் தேர்தெடுத்தேன் அதான் தப்பாயிடுச்சி”

   

“நீ தேர்ந்தெடுத்த விசயங்கள் ரெண்டுமே உன் வாழ்க்கைக்கு ரொம்ப தேவையானதா இருந்தா எப்படி ஒரு விசயத்தை கைவிடுவ சொல்லு. அப்படி நீ ஒவ்வொரு விசயமா கைவிட்டுட்டே போனா கடைசியில நீ இங்க எதுக்கு வந்தியோ அதையும் நீ கைவிட்டுட்டுவ பார்த்து ஜாக்கிரதை” என தாத்தா சொல்லவும் நந்தினிக்கு உடனே புரிந்து அவள் ரிஷியை பார்த்து பயந்துடன் தாத்தா சொன்னதை யோசிக்கலானாள். அவளின் மனநிலையை புரிந்துக்கொண்ட ரிஷியும் தாத்தாவிடம் மட்டும் கேட்கும் படி

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.