“ஏன் இவங்க செய்யக்கூடாதாமா” என நக்கலாக பாட்டி கேட்கவும்
“ஓ அப்படின்னா நீ கூட்டிட்டு வந்த பொண்ணை செய்ய வைக்க வேண்டியதுதானே”
“அது முடியாது”
“இங்க பாரு நான் நேத்தே எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லிட்டேன் இந்த 1 மாசமும் அவங்க நான் சொல்றதைதான் செய்வாங்க இப்படி நீ அவங்களை வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணா உனக்கொன்னும் இல்லை நீ கூட்டிட்டு வந்த பொண்ணை நான் இப்பவே வெளிய அனுப்பிடுவேன்” என சொல்ல பாட்டி அமைதியானார்.
தாத்தா வந்தனாவிடம்
”நீதானே காபி போட்டு கொண்டு வர போன இவ்ளோ நேரமா ஏன் அதை செய்யலை.”
அதைப்பார்த்த வந்தனா தாத்தாவிடம்
”தாத்தா என்னை மன்னிச்சிடுங்க நான் காபி போடதான் போனேன் அந்நேரம் பாட்டி வேலை தந்ததால நான் அதைப்பார்க்க போயிட்டேன்“
“ஆனா நீ சொன்னதால உனக்காக நீ கொண்டு வர்ற காபிக்காக காத்திருந்தேனே என் நம்பிக்கையை நீ உடைக்கலாமா”
“என்னை மன்னிச்சிடுங்க தாத்தா பெரியவங்களை மதிக்கனும்னு நினைச்சேன் பாட்டிதான் என்னை திசை திருப்பிட்டாங்க”
“இது காரணம் இல்லை நந்தினியை பாரு அவளும் காபி போட போனா அவளையும் அருந்ததி வேலை வாங்க பார்த்தா ஆனா அவள் எப்படி நடந்துக்கிட்டா அந்த மாதிரி நீயும் செஞ்சிருக்கனுமே ஏன் செய்யலை”