”தாத்தா ப்ளீஸ் எதுக்கு நந்தினியையே இப்படி கார்னர் பண்ணி திட்டறீங்க பாவம் அவள் பயந்துட்டா பாருங்க”
“எனக்கு புரியுது. ஆனா அவளும் கத்துக்கட்டும் இன்னிக்கு நானா பாட்டியான்னு யோசிச்சி பாட்டியை விட்ட மாதிரி நாளைக்கு நீயா அர்ஜூனான்னு யோசிச்சி உன்னை விட்டுட போறா”
என தாத்தா சொல்லவும் அவனும் ஒருவாராக புரிந்து சரியென தலையாட்டினான்.
அந்நேரம் மணி 8 என கடிகாரத்தில் பெண்டுலம் மணி அடிக்கவும் தாத்தா அந்த 4 பெண்களிடம்
”இங்க பாருங்க சோனா வந்தனா மிருதுளா நந்தினி மணி 8 ஆயிடுச்சி இப்ப இருந்து போட்டி ஆரம்பமாகுது இன்னிக்கு முதல் நாள்ங்கறதால சில விவரங்களை சொல்லிடறேன் கவனமா கேளுங்க மறுபடியும் மறுபடியும் நான் சொல்ல மாட்டேன். இந்த வீட்ல இருக்கறவங்க எல்லாரும் ரெடியாகி டிபன் சாப்பிட 9.30க்கு வருவாங்க 10 மணிக்கு வேலைக்கு போவாங்க இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு.
இதுக்குள்ள நீங்க 4 பேரும் கிச்சனுக்கு போய் டிபன் செய்ங்க நல்லா கவனிங்க உங்களுக்கு தெரிஞ்சத செய்ங்க ரொம்பல்லாம் கஷ்டப்படவேணாம். தனித்தனியா செய்யனும் இந்த வீட்ல எத்தனை பேர் இருக்காங்களோ எண்ணி அதுக்கு ஏத்த அளவுக்கு செய்தா போதும் 4 5 டிஷ்கள் செய்யனும்னு அவசியமில்லை ஆளுக்கு ஒரு டிஷ் பண்ணுங்க அதையும் நிறைவா எல்லாருக்கும் பத்தற மாதிரி செய்றீங்க அதிகமாவும் செய்ய வேணாம். இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு பிடிச்சதுதான் செய்யனும்னு அவசியமில்லை. உங்களுக்கு இந்த ஒன்றரை மணிநேரத்தில என்ன வருமோ அதை செய்ங்க அது போதும்.
தேவையான பொருட்கள் எல்லாம் அங்க இருக்கும் ஏதாவது தேவைன்னாலோ உதவின்னாலோ சுசித்ராவை கேளுங்க அவளும் உங்க கூட இருப்பா தூரமா இருந்து கவனிப்பா. எந்த பொருள் எங்க இருக்குன்னு அவள்கிட்ட கேட்டுக்குங்க இப்ப கிளம்புங்க 9.30க்கு சரியா டிபன் டைனிங் டேபிளுக்கு வரனும்” என தாத்தா சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார்.