(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

என தாத்தா சொல்லவும் சோனா நந்தினியை பார்த்து கெத்தாக சிரிக்க அதற்கு அவள் சிநேகமாக சிரித்துவிட்டு தாத்தாவிடம் மென்மையாக

   

”நான் ஹாஸ்டல்ல தங்கினதால குறிப்பிட்ட நேரத்திலதான் காபி டீ தருவாங்க இங்க எப்படி தாத்தா யாராவது தருவாங்களா நானே போய் போட்டுக்கட்டுமா” என்றாள் நந்தினி

   

“இந்த 1 மாசம் கிச்சன் உங்க 4 பேருக்கும் சொந்தம் நீயே கூட போட்டுக்கலாம்”

   

“ஓகே தாத்தா நான் காபி போட போறேன் உங்களுக்கு வேணுமா தாத்தா”

   

“கொண்டாம்மா”

   

“எனக்கும் எனக்கும் காபி” என வழிந்தான் ரிஷி அதைப்பார்த்து சிரித்த நந்தினியும் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கும் போது சோனா தடுத்தாள்

   

”அப்படியே எனக்கு கிரீன் டீ” என்றாள் அதைக்கேட்ட நந்தினி 

   

”எனக்கு அதெல்லாம் போட தெரியாது” என்றாள் அதற்கு தாத்தா

   

”இந்த வீட்ல யாரும் கிரீன் டீ குடிக்கறதில்லை உனக்கு வேணும்னா நீயே போய் போட்டுக்கலாம்” என சோனாவை பார்த்து சொல்ல அவளும் நந்தினியை பின்தொடர நினைக்கையில் மிருதுளா நந்தினியை தடுத்து

   

”நந்தினி எனக்கும் காபி வேணும்” என்றாள் கெத்தாக அதற்கு தாத்தா நந்தினியிடம்

   

”அம்மாடி இந்த வீட்ல எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் காபி போட்டு கொண்டா தனித்தனியா நீ செய்ய தேவையில்லை வந்தனா ஏதோ காபி போட போனா என்ன ஆனான்னு தெரியலை கொஞ்சம் கவனிம்மா” என சொல்ல அவளும் சோனாவுமாக கிச்சனுக்குள் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.