(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”தாத்தா உங்களுக்கு காபி வேணுமா டீ வேணுமா”

   

“காபியே கொடும்மா” என சொல்ல அவள் அடுத்து ரிஷியை பார்த்தாள்

   

”உங்களுக்கு என்ன வேணும்” என கேட்டுவிட்டு தலைகுனிந்துக்கொள்ள அவளது முகத்தை பார்க்க எண்ணி அவள் புறம் குனிந்தவனை தடுத்தார்

   

”என்னடா செய்ற”

   

”முகத்தை பார்த்து பேசலாம்னு”

   

“ஒண்ணும் தேவையில்லை நீ பேசு அவளுக்கு காது கேட்கும்” என சொல்ல அவனும் அவளிடம்

   

”காபி போதும்” என்றான். அதைக்கேட்டு வெட்கப்பட்டுக்கொண்டே அங்கிருந்து கிச்சனை நோக்கி ஓடினாள். அவள் ஓடவும்

   

”தாத்தா நான் என்ன கேட்டேன்னு இவள் இப்படி ஓடறா”

   

“நீ அவள்ட்ட பேசிட்டல்ல அந்த சந்தோஷத்தில ஓடியிருப்பா”

   

“அது சரி இந்த வெட்கம் ஒண்ணும் நடிப்பில்லையே நிஜம்தானே தாத்தா”

   

”நிஜமா இருந்தா சரி நடிப்பா இருந்திச்சி” என அவர் முடிக்கும் முன்பே

   

”வெளிய அனுப்பிடலாம் தாத்தா” என்றான் அவசரமாக

   

“இருடா துரத்தறதிலயே இருக்காத பொறு பொறு காபி வரட்டும்” என அவரும் அமைதியாக காலையில் வந்த நியூஸ் பேப்பரை புரட்டிக்கொண்டிருக்க அங்கு மிருதுளா வந்தாள். அவளைப்பார்த்த தாத்தா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.