(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”நீ ரிஷியை அத்தான்னு கூப்பிடறதால எல்லாம் அவரோட மனசை உன்னால அடைய முடியாது அதை புரிஞ்சிக்க உன்னைப்பார்த்தாலே பட்டிக்காட்டு பொண்ணு மாதிரியிருக்க உன் தகுதிக்கு ஆசைப்படாம ஏன் தகுதிக்கு மேல ஆசைப்படற அது தப்பில்லையா” என்றாள் 

   

“எனக்கு அத்தானை பிடிச்சிருக்கு” என்றாள் நந்தினி

   

”ரிஷியை பிடிக்காதவங்க யார்தான் இருக்காங்க சொல்லு இதோ நாங்க கூடதான் ரிஷிக்காக வந்தோம் அதுக்காக உன்னை மாதிரியா வல்கரா நடந்துக்கறோம்”

   

“இல்லை நான் ஒண்ணும் அப்படி நடந்துக்கலை”

   

“நீ எப்படி நடந்துக்கிட்டாலும் போட்டின்னு ஒண்ணு இருக்கு அதுல ஜெயிக்கனும் தாத்தாகிட்ட நல்ல பேரை எடுக்கனும் புரியுதா. இந்த வீட்ல இருக்கறவங்க எல்லாருமே பணக்காரங்க இன்னும் கொஞ்ச வருஷத்தில கோடீஸ்வரங்களா கூட மாறுவாங்க ஆனா உன் நிலைமை என்ன இங்க உன்னால ஜெயிக்க முடியலைன்னா நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் ஆகனும் அதை மனசுல வைச்சிக்க” என அவள் 10 நிமிடம் அவளுக்கு உபதேசம் செய்யும் போதே  மிருதுளா பாத்ரூம் விட்டு வெளியே வந்தாள். சோனாவும் குளிக்க சென்றுவிட இம்முறை மிருதுளா நந்தினியிடம்

   

”நாங்க எல்லாருமே இந்த வீட்டு ஆளுங்களோட வந்தவங்க நீ யாரு அர்ஜூன் கூட வந்தவ அர்ஜூனே இங்க சாதாரண ஒரு தொழிலாளிதான் அவனோட தங்கச்சி நீ பணக்காரனை அதுவும் முதலாளி மேல ஆசைப்படலாமா தப்பில்லையா”

   

“இது ஒண்ணும் கம்பெனி கிடையாதே முதலாளி தொழிலாளின்னு பேதம் பார்க்க அதோட தாத்தாவும்தானே என்னை இங்க தங்க சொன்னாரு போட்டியில கலந்துக்க சொன்னாரு” என்றாள் நந்தினி

   

“ஆமாம் உண்மைதான் ஆனா பாவம் நீ இந்த வீட்லயே பாட்டி ஒருத்தருக்குதான் செல்வாக்கு அதிகம். இந்த போட்டியில நான் ஜெயிச்சாலும் தோத்தாலும் ரிஷி எனக்குதான்னு பாட்டி உறுதியாக சொல்லி என்னை கூட்டிட்டு வந்திருக்காங்க. அதனால ரிஷி மேல ஆசைப்படறத 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.