“ஓ அப்படியா சரி சரி அண்ணா தங்கச்சி கொஞ்சம் கூட குறைய செஞ்சிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்லிடுங்கண்ணா”
“இதை நீ சொல்லித்தான் நான் செய்யனுமாடா நானே சொல்லிடுவேன் போதுமா”
“சரிண்ணா நான் அப்புறம் போன் பண்றேன்” என சொல்லிவிட்டு போன் வைத்தான் அர்ஜூன்
ரிஷி மணியை பார்க்க அது 8.30 என காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு இந்த குறைஞ்ச நேரத்தில எப்படி அவள் இங்க இருக்கறவங்களுக்கு சேர்த்து டிபன் செய்து முடிப்பா சரி பார்க்கலாம். காபியே சூப்பரா போடறா டிபன் கூட சூப்பாராதான் இருக்கும்” என நினைத்துக்கொண்டே வெளியே சென்றவன் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த தாத்தாவிடம் சென்று அமர்ந்தான்
”டேய் என் பக்கத்தில உட்காராதடா” என தாத்தா கத்தவும் பதட்டமான ரிஷி தாத்தாவிடம்
“என்னாச்சி தாத்தா”
“பேசாதடா நந்தினி உனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தா அவளை நீ என்னடா செஞ்ச”
“அதுவா முதல் நாள் இல்லையா அதான் பூஸ்ட் கொடுத்து அனுப்பினேன்”
“புரியலை”
“முத்தம் கொடுத்து தைரியப்படுத்தி அனுப்பினேன் தாத்தா”
“டேய் வேணாம்டா இது தப்புடா அவள் வேற உன் மேல பெரிசா நம்பிக்கை வைச்சி போட்டியில கோட்டை விட்டுட போறா”
“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது தாத்தா காலையில அவள் தந்த காபியை குடிச்சீங்கள்ல எப்படியிருந்துச்சி”