”எப்படியும் என்னை நீங்க கடைசியாதான் கூப்பிடுவீங்கன்னு நினைச்சேன். அதனாலதான் கொஞ்சமா செஞ்சிருக்கேன் ஆளுக்கு ஒரு சின்ன உருண்டையை வைக்கிறேன் நீங்க ஏற்கனவே நிறைய சாப்பிட்ட காரணத்தால இதை சாப்பிட்டா சரியா போயிடும்னு நினைக்கிறேன் தாத்தா என்ன சொல்றீங்க தாத்தா” என நந்தினி கேட்க
”சரிம்மா வை ஆமா அது என்ன ஓ கீரை குழம்பா சரி சரி பரிமாறு” என சொல்லவும் அவளும் ஆசையாக பரிமாறினாள். அடுத்து ரிஷிக்கு பரிமாற அவன் அதை விநோதமாக பார்த்தான்
”இது என்ன” என்றான் ரிஷி.
“இது களி அத்தான்”
“களின்னா என்ன” என கேட்க அதற்கு தாத்தாவே
”ராகி உருண்டை உடம்புக்கு நல்லது”
என சொல்ல ரிஷி அவள் வைத்த உருண்டையை எடுத்து பார்த்து
”இதை எப்படி சாப்பிடறது” என கேட்க அதற்கு தாத்தாவே டெமோ அளித்தார்.
”இந்த கீரை குழம்பை இப்படி ஊத்தி மூழ்கவைச்சி இப்படி வாயில போட்டு விழுங்கனும்” என செய்தும் காண்பித்தார் தாத்தா. ரிஷியும் தாத்தா சொன்னது போலவே சாப்பிட்டான் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருக்க அவன் நந்தினியிடம்
”ரொம்ப நல்லாயிருக்கு நந்தினி” என்றான்
”தேங்ஸ் அத்தான்” என சொல்லிவிட்டு பாட்டியிடம் செல்ல அவர் முகத்தை தூக்கி வைத்திருக்கவும் தாத்தாவை பாவமாக பார்த்தாள் நந்தினி
”அருந்ததி ஏன் இப்படியிருக்க இன்னுமா உன் கோபம் போகலை பாவம் அந்த பொண்ணை ஏன்