விட்டா எப்படி வந்தனா செஞ்சது மிச்சமாகாம சரியா போச்சின்னா என்னாகும் ம் தப்பும்மா இனிமே எந்த டிஷ் செய்றதாயிருந்தாலும் சரி அடுத்தவங்களை பார்க்காத உன் திறமையை காட்டு. இப்படி பத்தும் பத்தாம செய்யாத சரியா போ போய் மத்தவங்களுக்கும் இந்த கிரேவியை பரிமாறு நாங்க வந்தனா செய்த இட்லியை தொட்டு சாப்பிடறோம் ஆமா காலையில எதுக்கும்மா இப்படி நான்வெஜ் செஞ்சிருக்க”
“எனக்கு நான்வெஜ் இல்லைன்னா சாப்பிட முடியாது அதான்”
“ஓ இது உன் பழக்கமா”
“ஆமாம் தாத்தா 3 வேளையும் நான்வெஜ் சாப்பிட்டே பழக்கம்”
“ஆனா எனக்கு வயசாயிடுச்சி காலையில இப்படி ஹெவியான மசாலாவை சாப்பிட்டா எனக்கு உடம்பு சரியில்லாம போயிடும் கொஞ்சம் மசாலாவை குறைச்சிக்கம்மா” என சொல்லவும் மிருதுளாவும் சரியென தலையாட்டிவிட்டு தான் செய்த கிரேவியை ஸ்பூன் மூலம் அனைவருக்கும் பரிமாறினாள். அனைவருக்கும் ஒரு சிறிய மீன் துண்டுதான் கிடைத்தது. இந்த கிரேவிக்கு மற்றவர்கள் ஒரு இட்லியை வைத்துக்கொண்டே முடித்துவிட்டனர்.
இனி ரிஷி நந்தினியை பார்த்தான் அவளது கையில் பெரிய கிண்ணமும் இன்னொரு கையில் அதைவிட பாதி அளவில் இருந்த கிண்ணமும் இருக்க அவனுக்கு சந்தேகமே வந்தது
”என்ன இது சின்ன சின்னதாயிருக்கே இது எப்படி எல்லாருக்கும் பத்தும். இப்பதானே தாத்தா மிருதுளாவுக்கு டோஸ் விட்டாரு. இப்ப என் நந்தினிக்கும் டோஸ்விடுவாரு போல இருக்கே எப்படியாவது தாத்தாகிட்ட பேசி கொஞ்சம் திட்டறதை குறைச்சிக்க சொல்லனும்” என நினைத்தவன் பக்கத்தில் இருந்த தாத்தாவிடம்
”தாத்தா ஒரு உதவி”
“என்னடா புதுசா இருக்கு நீயா இப்படி உதவி கேட்கற” என்றார் தாத்தா
“கேட்க வேண்டிய நிலைமை” என்றான் ரிஷி.