(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 13 - சசிரேகா

   

ரு வாரம் கழித்தும் தருணின் உடல்நிலை மோசமாகவே இருந்தது, அதைக் கண்டு ஹரிணி பதறினாள். எங்கே பவானிக்கு நியாயம் கிடைக்காமல் போய்விடுமோ, அதுவரையாவது தருணை காப்பாற்ற வேண்டுமே என நினைத்து அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தாள். தருணுக்கு நல்ல சிகிச்சையே தந்தார்கள், பாடி ஃபுல் செக்கப் செய்தார்கள், எதற்கும் இருக்கட்டுமென ஹரிணி அவனது ஆண்மை பரிசோதனை வேறு செய்யச் சொன்னாள், அதுவும் டெஸ்ட் எடுத்து முடித்தார்கள், 3 நாட்கள் ஆஸ்பிட்டலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான் தருண். 3 நாள் கழித்து மெல்ல கண்கள் திறந்தான். சுற்றி முற்றி பார்த்தான், தான் இருப்பது ஆஸ்பிட்டல் என தெரிந்துக் கொண்டவன் தன்னை ஆராய்ந்தான், ஒரு பக்கம் அவனுக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டு இருந்தது, இன்னொரு பக்கம் அவனது நாடித்துடிப்பு மானிட்டரில் கனெக்ட் செய்யப்பட்டு அதுவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது, இதில் அவனின் இதயதுடிப்பை கண்காணிக்க அவனது நெஞ்சில் ஒயர்கள் சொருகப்பட்டு அதற்கு என தனியாக ஒரு மிஷின் தன் வேலையை சிரத்தையாக செய்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அவனுக்கு அச்சமே எழுந்தது

   

”என்னாச்சி எனக்கு ஏதோ பெரிய வியாதி வந்துட்ட மாதிரி இவ்ளோ செட்டப் பண்ணி வைச்சிருக்காங்க, ரூம்ல வேற யாரும் இல்லையே பயமா இருக்கே” என புலம்பியவன் வாய்விட்டு

   

”ஹலோ யாராவது இருக்கீங்களா” என கத்தினான். அதற்கு உடனே பதில் கிடைத்தது ஒரு நர்ஸ் அவனை நாடி வந்தாள்

   

”எனக்கு என்னாச்சி” என பயத்துடன் கேட்டான் தருண்

   

”உங்களுக்கு ஒண்ணும் இல்லை, பதட்டப்படாதீங்க நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்”

   

”என்னை யாரு இங்க அட்மிட் பண்ணது“

   

”உங்க ஒய்ப்”

   

”ஹரிணியா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.