”புரியலை நீ என்ன சொல்ற“
”நடிச்சது போதும் உண்மையை சொல்லு தருண்“
”எந்த உண்மை”
”உன் உடம்புல என்ன பிரச்சனை“
”என் உடம்புலயா என்ன பிரச்சனை ஒண்ணும் இல்லையே”
”பொய் சொல்லாத திடீர்ன்னு ஒரு நாள் நீ மயங்கிட்ட, உன்னை ஆஸ்பிட்டல்ல சேர்த்து செக்கப் செய்து பார்த்தப்ப டெஸ்ட் ரிசல்ட் வந்தது, அதை பார்த்து நான் ஷாக்காயிட்டேன்”
”என்ன டெஸ்ட், என்ன ரிசல்ட் எனக்கு ஒண்ணுமே புரியலை“
”உன்னை இத்தனை நாளும் ஆஸ்பிட்டல்ல கவனிச்சதால என்னால ஆபிஸ் வேலை செய்ய முடியாம போய் என்னை டிபிரோமோட் பண்ணிட்டாங்க, இப்ப நான் ஹெச் ஆர் அவ்ளோதான்”
”சே இதுக்காகவா நீ அலட்டிக்கற விட்டுதள்ளு“
”எதை விடறது உனக்கிருக்கற குறையையா“
”ஹரிணி என்ன பேசற நீ“
”சத்தியம் பண்ணி சொல்லு, நீ ஆரோக்கியமாதான் இருக்கேன்னு, உனக்கு எந்தக் குறையும் இல்லைன்னு சொல்லு”
”ப்ச் என்ன உளர்ற நீ எதையோ மனசுல நினைச்சிக்கிட்டு பேசாத ஹரிணி” என கோபத்தில் பொங்க அவளோ அங்கிருந்த ஆஸ்பிட்டலில் தந்த டெஸ்ட் ரிசல்ட்டை அவனிடம் நீட்டினாள்