(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”நான் எதையும் மறைக்கலை ஹரிணி, நான் நல்லாதான் இருக்கேன்“

   

”ஓ அப்படியா சரி வாங்க நாளைக்கே வேறொரு ஆஸ்பிட்டலுக்கு போய், உங்களை டெஸ்ட் பண்ணலாம், அதுல எப்படி ரிசல்ட் வருதுன்னு தெரிஞ்சிக்கிறேன், அதுலயும் உங்களுக்கு ஆண்மையில்லைன்னு தெரிஞ்சா, அப்புறம் இருக்கு உங்களுக்கு” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவனோ இனி என்ன செய்வது என பலவிதமாக யோசித்தான்.

   

உறக்கம் வரவில்லை, பிரச்சனை பெரிதாகிவிட்டது, இனியும் உண்மையை மறைத்து பிரயோசணம் இல்லை நடந்ததை சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான் தருண்.

   

மறுநாள் காலையில் அவனாகவே அவளை தேடிச் சென்றான்

   

”ஹரிணி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்“

   

”நான் ரெடி நீங்க ரெடியா“

   

”எதுக்கு”

   

”ஆஸ்பிட்டல் போகனும்ல வாங்க“

   

”அவசரப்படாத நான் சொல்ல வர்றதை கேளு“

   

”எதை கேட்கனும், அதுக்கெல்லாம் நேரமில்லை வாங்க போலாம்“

   

”பொறுமையா இரு நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு அப்புறம் நீ எந்த முடிவுக்கு வந்தாலும் சரி நான் அதை ஏத்துக்கறேன் ப்ளீஸ் ஹரிணி” என கைகூப்பி கெஞ்ச ஹரிணியும் சற்று மனம் இரங்கி வந்து

   

”சரி சொல்லுங்க என்ன விசயம்” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.