(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”அப்படின்னா அன்னிக்கு நைட் என்கூட நீங்க இருந்ததா சொன்னது”

   

”அது சும்மா பொய், அப்படி சொன்னாலாவது நீ இளங்கோவை மறந்துட்டு என்னை கணவனா நினைப்பேன்னுதான், சாகற வரைக்கும் இளங்கோவை நினைச்சி நீ கவலைப்பட்டுக்கிட்டு இருப்ப, உன்னை கவலைப்பட வைக்கவா நான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன, நீ சந்தோஷமா இருக்கனும் அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்“

   

”அப்போ அநாதை ஆசிரமத்துக்கு கூட்டிட்டுப் போனீங்களே அப்பவாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே”

   

”சொல்லி பவானியை போல நீயும் தப்பான முடிவு எடுத்து தற்கொலை செய்துக்கறதுக்கா வேணாம் ஹரிணி, நீ ரொம்ப ஸ்ட்ராங் பர்சன், ஆனாலும் சில விசயங்களல நீ மனசு உடைஞ்சிப் போயிடற, உண்மையைச் சொல்லி பவானியை நான் இழந்த மாதிரி உன்னையும் இழக்க மனசில்லாமதான் நான் உண்மையைச் சொல்லாம மறைச்சேன் மத்தப்படி உன்னை ஏமாத்தனும்ங்கற அவசியம் எனக்கு சுத்தமா இல்லை, என்னை நம்பு” என சொல்ல ஹரிணி வியப்பின் உச்சத்தில் இருந்தாள். அவளுக்கு பவானியை பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும் அவளின் டைரியை படித்த காரணத்தாலும் இப்போதும் கூட தருணை முழுதாக நம்பாமல் அவனை கிரிமினாலகவே நினைக்கலானாள், ஒருவேளை அவளுக்கு பவானி பற்றியோ டைரியை பற்றியோ தெரியாமல் இருந்திருந்தால், இந்நேரம் தருண் பேசிய பேச்சிற்கு அப்படியே மனம் உருகி அவன் காலடியில் கிடந்திருப்பாள், அப்படியிருந்தது அவனது பேச்சு, தேனொழுக பேசிவிட்டு கண்ணீருடன் கைகூப்பி ஹரிணியிடம் சரணாகதி அடைபவன் போல போஸ் தந்தான்

   

அதைக் கண்ட அவளுக்கு பளார் என அவனை அறையலாம் போல இருந்தது ஆனாலும் தயங்கினாள் ஆனால் மறுநொடியே இளங்கோவை கொன்ன கொலைகாரன் என்ற எண்ணம் வந்ததும் எதையும் யோசிக்காமல் தருணின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை, அதை அவனே எதிர்ப்பார்க்கவில்லை ஆனாலும் அந்த சூழ்நிலையை அப்படியே தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.