(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”வேணாம் என்னை காயப்படுத்தி பார்க்காத, ப்ளீஸ் பவானி கூட என்னை புரிஞ்சிக்கிட்டா ஆனா நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற“

   

”நான் ஒண்ணும் பவானியில்லை நான் ஹரிணி“

   

”இருந்துட்டுப் போ யார் இல்லைன்னது ஆனா, நான் உன்னை மலையளவு நம்பறேன், என்னோட குறையை வெளிஉலகத்துல சொல்லி அவமானப்படுத்திடாத, அப்புறம் நான் என் உசுரையே விட்டுடுவேன், ஓடற ரயில்ல குதிச்சி தற்கொலை செய்துக்குவேன்” என சொல்ல அதைக்கேட்டு பவானி பயந்து மனம் இரங்கினாள் என டைரியில் படித்த வசனம் ஹரிணிக்கு நினைவு வந்தது

   

”ஓ தற்கொலை ட்ராமாவா இப்படி ப்ளாக்மெயில் பண்ணி என்னை உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிக்கனும்னு ஆசைப்படறீங்களா அது முடியாது“ என கண்டிப்பாகச் சொல்ல அவனோ சட்டென அவளின் காலில் விழுந்தான். அதுகூட பவானி தன் டைரியில் எழுதியிருந்தாள். அது நினைவுக்கு வரவும் ஹரிணியால் சிரிப்பை அடக்க இயலவில்லை, கலகலவென சிரிக்க அவனுக்கு அசிங்கமாகிப் போனது

   

”சிரிக்காத ஹரிணி இதே நிலைமை உனக்கு இருந்திருந்தா, நிச்சயம் நான் உன் குறையை பெரிசா நினைக்காம உன்கூட சந்தோஷமா வாழ்ந்திருப்பேன் தெரியுமா”

   

”இந்த வசனம்லாம் கேட்க நல்லாயிருக்கு இதெல்லாம் சினிமாவுக்கு வேணா பொருத்தமா இருக்கும் ஆனா, இது ரியல் வாழ்க்கைக்கு ஒத்து வராது மிஸ்டர் தருண்” என்றாள் அவள் அவ்வாறு பேசியது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இனி இவளிடம் கெஞ்சுவதால் பலனில்லை என புரிந்துக் கொண்டான்.

   

”சரி இப்ப என்ன வேணும் உனக்கு”

   

”டைவர்ஸ்“

   

”தரேன் ஆனா ஒரு கன்டிஷன்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.