(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”அடி ஹரிணி நல்லா அடி என்னை அடிச்சி கொல்லு, நான் உனக்கு செய்த துரோகத்துக்கு சாவுதான் சரியான தண்டனை, என்னை கொன்னுடு போதும், குற்ற உணர்ச்சியோட உன்முன்னாடி வாழ்ந்தது போதும் என்னால இனிமேல பொய்யா நடிக்க முடியாது, என்னை கொன்னுடு ஹரிணி” என அவன் அழுதபடி பேச ஹரிணியோ

   

”ஓ நல்ல நடிகன்டா நீ“ என மனதில் நினைத்துக் கொண்டு வெளியே

   

”உன்கிட்டயிருந்து எனக்கு டைவர்ஸ் வேணும்” என சொல்ல தருண் திடுக்கிட்டான்

   

இதையேதான் பவானியும் அவனிடம் கேட்டாள் ஆனால், அவனோ அவளுக்கு டைவர்ஸ் தரமாட்டேன் என வம்படியாக இருந்தான், எங்கே தன் குறை வெளிஉலகத்துக்கு தெரிந்துவிடுமோ என பயந்து அவளை தன்னிடமே வைத்திருக்க முடிவெடுத்து அவளை படாதபாடு படுத்தினான், இப்போது ஹரிணியும் அதையே சொல்லவும் அவனுக்கு வேறுவழி தெரியவில்லை பவானி விசயத்தில் என்ன செய்தானோ அதையே ஹரிணியிடம் செய்யலாம் என எண்ணி அவளை பார்த்து

   

”இவ்ளோதானா சே நான் உன்னை பெரிசா நினைச்சேன், உன்னை மதிச்சேன், மரியாதை தந்தேன் ஆனா, நீ என் குறையை சுட்டிக்காட்டி டைவர்ஸ் கேட்கற அப்போ உனக்கும் செக்ஸ்தான் தேவை அதானே இவ்ளோ கீழ்த்தரமானவளா நீ“ என வாய்க்கு வந்தபடி அளந்தான்.

   

இது போன்று தருண் தன்னை கேவலமாக பேசி வைத்தான் என பவானி தன் டைரியில் குறிப்பிட்டிருந்தது ஹரிணிக்கு நினைவுக்கு வந்தது, பவானியை போல தானும் உடைந்து போய் அழுது அவனிடம் தஞ்சமடைய வேண்டும் என்றே இவ்வாறு அவன் பேசுகிறான் என புரிந்துக் கொண்ட ஹரிணியோ அவனின் பேச்சிற்கு மசியாமல்

   

”முடிஞ்சதா உன் நடிப்பு கிளம்பு“

   

”எங்க”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.