”வக்கீல் ஆபிசுக்கு உடனே டைவர்ஸ்க்கு ஏற்பாடு செய்றேன், கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இரு வேணும்னா உனக்கு ஜீவனாம்சம் தரலாம் ஆனா, நீ எனக்கு செய்த துரோகத்துக்கு அதையும் நான் தரமாட்டேன் கிளம்பு”
”முடியாது ஹரிணி நீ ஒண்ணும் என்கூட வாழ்ந்து குழந்தையை பெத்துக்கனும்னு கல்யாணம் செய்துக்கலை, லாஜிக்கா யோசி நீ என்னை எதுக்கு கல்யாணம் செய்துக்கிட்ட பாதுகாப்புக்காக, அந்த வேலையை நான் சிறப்பா செய்றேன்ல அப்புறம் என்ன”
”ஓ லாஜிக்கெல்லாம் பார்க்கறவனா நீ சரி வா கோர்ட்ல போய் நியாயம் கேட்கலாம், உன் பக்கம் நியாயம் இருக்கா இல்லை என் பக்கம் நியாயம் இருக்கான்னு ஜட்ஜ் சொல்வாங்க அதுபடி நடந்துக்கலாம்”
”வேணாம் ஹரிணி தேவையில்லாம என்னை கோபப்படுத்தி பார்க்காத”
”எனக்குதான் மலையளவு கோபம் வருது உன் மேல ஆனாலும் பொறுமையா இருக்கேன், அதுக்கு காரணம் உன்னை நான் நம்பினேன் பாரு அந்த முட்டாள்தனத்துக்காகத்தான்”
”நான் உனக்கு டைவர்ஸ் தரமாட்டேன் ஹரிணி, நீ எனக்கு வேணும்”
”வேணுமா எதுக்கு அதான் உன்னால குழந்தையை தரமுடியாதுல்ல”
”என்ன எல்லா பொண்ணுங்களும் இதையே சொல்லி குத்திக்காட்டறீங்க குழந்தை தரமுடியலைன்னா என்ன உங்களை பாதுகாக்க ஒரு ஆம்பளை போதாதா“
”ஓ நீ ஆம்பளையா” என்றாள் நக்கலாக அதில் அவன் காண்டானான்
”வேணாம் ஹரிணி, இதுபோல நக்கல் செய்யாத, இதனாலதான் நான் என் குறையை யார்கிட்டயும் சொன்னதில்லை, உனக்கென்ன குழந்தைதானே வேணும் வா ஆசிரமத்துக்குப் போய் ஒண்ணு என்ன 10 குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கலாம்”