(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”ஆமாம்“

   

”அவள் எங்க”

   

”தகவல் சொல்றோம் வருவாங்க”

   

”கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க” என சொல்ல நர்சும் அங்கிருந்து சென்றாள்.

   

சிறிது நேரத்தில் ஒரு மருத்துவர் வந்து அவனை பரிசோதித்துவிட்டு 

   

”நீங்க இப்ப நல்லாயிட்டீங்க, டோன்ட் ஒர்ரி நாளைக்கே நீங்க வீட்டுக்குப் போகலாம்” என சொல்ல அவனுக்கு நிம்மதியானது. டாக்டர் நர்ஸிடம்

   

”அவரோட ஒய்ப்க்கு தகவல் சொல்லிட்டீங்களா”

   

”சொல்லியாச்சி டாக்டர், வந்துக்கிட்டே இருக்காங்க“ என சொல்ல மருத்துவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்

   

அரை மணி நேரம் கழித்து ஹரிணி வந்தாள். அவளைக் கண்டதும் தருண் கலங்கிப் போனான்

   

”ஹரிணி ஹரிணி எனக்கு என்னாச்சி ஹரிணி, எதுக்கு இப்படி என்னை அட்மிட் பண்ணியிருக்க” என கேட்க அவளோ அவனிடம் அக்கறை காட்டவில்லை, அன்பாகப் பேசவில்லை, கோபத்தை கொட்டவில்லை மாறாக இயல்பாக யாரோ ஒருவரிடம் பேசுவது போல பேசி வைத்தாள்

   

”டாக்டர்கிட்ட பேசிட்டேன், இப்பவே உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லிட்டாரு கிளம்பலாமா” என சொல்ல அவனோ

   

”ஓ தாராளமா என்னால இங்க கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலை, பைத்தியம் பிடிக்கற 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.