“புரியுது கீத்ஸ். ஆனால் யோசிச்சு பாரேன், அவ நம்ம ஃபேமிலி தாண்டி யார் கிட்டேயாவது அப்படி பேசி இருக்காளா??? உன் கிட்ட பேசினது கூட என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆன டைம்ல் தானே? அவளுக்கு எல்லாமே நாம தான்!”
“ஹ்ம்ம்... புரியுது விஜய்!” என்ற கீதாவின் மனதினுள் தியாகுவிடம் சிறுக் குழந்தை போல சண்டையிட்ட கிருத்திகாவின் நினைவு வந்தது.
“எனக்கும் நீ சொல்ற தியாகு அம்மா பாயின்ட் புரியுது! அது தப்புன்னும் நான் சொல்லலை! ஒன்னு செய்வோம், இப்போதைக்கு நாம இவங்க விஷயத்துல மூக்கை நுழைக்க வேண்டாம். ஃப்ரீயா விடுவோம். தியாகு நிஜமாவே சீரியஸா இருந்து, பிரின்சஸ்க்கும் ஓகேனா மேலே பார்ப்போம்.”
கீதாவின் முகம் மலர்ந்தது!
“கரக்ட் மிஸ்டர் சூப்பர் ஸ்மார்ட்,” என வார்த்தைகளாலும் கணவனை பாராட்டினாள்!
“தேங்க் யூ! தேங்க் யூ! தேங்க் யூ! அப்போ என் ட்ரீட் கீத்ஸ்????”
“ஹான்ங்... கடைல போய் வாங்கி சாப்பிடுங்க!”
“மை வெரி ஓன் பேக்கரி நீ இருக்கும் போது நான் ஏன் போகனும்??? பேட் அ கேக் பேட் அ கேக் மை செல்ல சாக்லெட் பேபி!!!”
விஜயை பார்த்து முறைத்தாலும் கூட கீதா மனதினுள் அவனின் இந்த செல்லம் கொஞ்சல்ஸ்களை வெகுவாக ரசிக்க தான் செய்தாள். விஜயோ எப்போதும் போல சிறிதே அவளை மயக்கினான்!
🌼🌸❀✿🌷