வந்தது. யாரையோ தேடுவதுப் போல ஒவ்வொருவர் பக்கமாக அந்த துப்பாக்கி முனை போனது.
“டேய் வினாயக், இது உன் வேலை தான? மிரட்ட இதையும் கூட இழுத்துட்டு வந்தீயா? சப் இன்ஸ்பெக்டர் சார், இப்போவாவது இவனைப் பத்தி உங்களுக்கு புரிஞ்சுதா? அரெஸ்ட் செய்ங்க சார். இவன் தான் கொலைக்காரன்.” ராகுல் கோபத்துடன் சத்தமாக கத்தினான்.
அபினவ் மெதுவாக தன் துப்பாக்கியை கையில் எடுத்தான். ஆனால் வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவனின் துப்பாக்கியை கண்டுப்பிடித்து சுட்டது அந்த குட்டி ட்ரோன். அபினவின் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழ, சண்டைப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கமாக நகர்ந்துக் கொண்டே அலறினார்கள்.
துப்பாக்கியுடன் இருந்த ட்ரோன் அவர்களை சுற்றி சுற்றி வரவும், பயத்தில் அனைவரும் ஓடத் தொடங்கினார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
யக்.
“இரண்டுப் பேரும் இங்கேயே இருங்க. வீட்டுக்குள்ளேயும் போக வேண்டாம்.” வினாயக் அவர்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வேகமாக ஓடினான்.
அங்கே ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையில் சிதறி சென்றிருக்கவே, ட்ரோன் இப்போது ஸ்ரீனிவாஸ், அபினவை தொடர்ந்துக் கொண்டிருந்தது.
அபினவின் காலில் எதோ தடுக்கியது. அவன் கீழே விழுந்து விடவும், ஸ்ரீனிவாஸ் மட்டும்