(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

ஓடினான். ட்ரோனின் துப்பாக்கி முனையும் அவனை தொடர்ந்தது.

   

வினாயக்கும், ராகுலும் அபினவ் எழுந்திருக்க உதவி செய்தார்கள்.

   

“வினாயக் இது உங்களுது இல்லையா? அப்போ எப்படி ஸ்ரீனிவாசை காப்பாத்துறது?” ராகுல் புரியாமல் குழம்பினான்.

   

ப்ரியம்வதா நடப்பதை மூச்சு விடவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

   

“ப்ரியா, ஐஸ்வர்யா எங்கே?” கலைவாணி கேட்டப் பிறகே ஐஸ்வர்யா அங்கே இல்லை என்பது ப்ரியம்வதாவிற்கு புரிந்தது. 

   

“கதவு திறந்திருக்கும்மா, உள்ளே இருக்காளோ என்னவோ!”

   

“மரியாதைக் கொடுத்து பேசு ப்ரியா!”

   

“அதெல்லாம் அப்புறம். முதல்ல அவ எங்கே என்ன செய்றான்னு எனக்கு தெரியனும். நீங்க இங்கேயே இருங்க, அசையாதீங்க. நான் பார்த்துட்டு வரேன்.”

   

“ப்ரியா, வினாயக் என்ன சொன்னார், இங்கேயே இருன்னு சொன்னாரே?”

   

“ஐஸ்வர்யா என்ன செய்றான்னு பார்த்துட்டு வந்திடுறேன்ம்மா,” ப்ரியம்வதா வீட்டினுள் நுழைந்தாள்.

   

❀✿❀✿❀✿

   

ஐஸ்வர்யா தான் தங்கி இருந்த அறைக்குள் பரபரப்புடன் சென்றாள். அங்கிருந்த ஃபிளவர் வேசை எடுத்து தள்ளி வைத்து விட்டு அது இருந்த மேஜையை விலக்கினாள். அதன் பின்னே மறைந்து இருந்த சிறிய பொருளை அவள் கையில் எடுத்த நேரம் அவளின் பின்னே சத்தம் கேட்டது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.