(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 14 - சசிரேகா

   

போட்டியின் மூன்றாம் நாள்

   

சனிக்கிழமை என்பதால் நந்தினி காலை டிபனுக்கு பொங்கல் செய்ய எண்ணி எழுந்த உடனே அறையை விட்டு வெளியே வந்தவள் கிச்சனில் சென்று பொங்கலுக்கு தேவையான அரிசி பருப்பை ஊறவைத்துவிட்டு வெளியே வந்தவள் ஜாக்கிங்காக செல்ல வெளியே வந்த ரிஷியை பார்த்தாள்.

   

”என்னம்மா இப்பவே கிச்சன்ல இருந்து வர்ற உன் கடமை உணர்ச்சியை கண்டு என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சி” என ரிஷி சொல்லவும்

   

”சிலிர்க்கும் சிலிர்க்கும் வெட்டியா இருந்தா இப்படித்தான் ஆகும்” என சொல்லிக்கொண்டே வந்தான் அர்ஜூன்.

   

அவனை அந்த நேரத்தில் அந்த இடத்தில் கண்ட ரிஷிக்கு பக்கென்றது. நந்தினியோ அண்ணனை பார்த்த சந்தோஷத்தில் அவனிடம் சென்று நின்றுவிட்டாள். அதைப்பார்த்த ரிஷிக்கு கோபமே வந்தது

   

”அடிப்பாவி உன் அண்ணனை பார்த்ததுமே இந்த அத்தானை மறந்துட்டியேடி உனக்கு எவ்ளோ பூஸ்ட் கொடுத்திருப்பேன் எல்லாத்தையுமா மறந்துட்ட பாவி இரு வரேன்” என மனதுக்குள் திட்டிக்கொண்டே அர்ஜூனிடம் சென்றான்.

   

”இங்க என்னடா செய்ற” என கத்தினான் ரிஷி அர்ஜூனை பார்த்து கேட்க

   

”இங்க தங்கலாம்னு வந்தேன்”

   

“தாத்தாக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமா உன்னால நந்தினியை போட்டியிலிருந்து அனுப்படுவாரு”

   

“என்னை வரவழைச்சதே தாத்தாதான்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.