(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அப்படியா எனக்கு தெரியாதே”

   

“அதுமட்டுமா சமைச்ச கைக்கு முத்தம் கொடுக்கலாம்னு கூட சொன்னீங்களாமே”

   

“அதுக்கு” என ரிஷி கேட்க வந்தனா தன் வலது கரத்தை அவன் முன் நீட்டினாள்.

   

குப்பென வேர்த்து போன ரிஷிக்கு அர்ஜூனை இந்த காபியை குடிக்கவைத்து கொல்ல வேண்டும் என தோண அவன் வந்தனாவிடம்

   

”அது சும்மா சொன்னேன் பேச்சுக்குதான் இப்ப நீ கிளம்பு யாராவது பார்த்தா என்னை தப்பா நினைப்பாங்க”

   

”யாரு தப்பா நினைப்பாங்கன்னு சொல்றீங்கண்ணா” என கேட்டுக்கொண்டே நந்தினியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான் அர்ஜூன் நந்தினி கையிலும் காபி இருக்கவே அவன் அதிர்ந்து அவள் முகத்தை பார்க்க அவளோ வந்தனாவையும் ரிஷியையும் மாறி மாறி பார்த்துவிட்டு கோபத்தில் முகம் சிவந்தாள். திடீரென அர்ஜூன் மற்றும் நந்தினி வரவும் வந்தனாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. இரு பெண்களின் முகத்தையும் பார்த்த ரிஷிக்கு தலை சுற்ற அவன் அமைதியாக அங்கிருந்த கட்டில் மீது அமர்ந்தான்.

   

”அண்ணா”

   

“ம்”

   

”என்னாச்சி”

   

“ம்ஹூம்”

   

“காபி நல்லாயிருந்திச்சாணா”

   

“ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.