(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“சரி வா இப்பவே வீட்ல இருக்கற எல்லார் முன்னாடியும் சொல்றேன் அப்பவாச்சும் நீ நம்புவியா”

   

“எதுக்கு தாத்தா மானம் போறதுக்கா சொல்றதாயிருந்தா எப்பவோ சொல்லியிருக்கனும் போட்டி ஆரம்பிச்சி 2 நாள் முடிஞ்ச பின்னாடி சொல்லக்கூடாது”

   

“சரிடா தப்பாயிடுச்சி அதுக்காக ஏன் இப்படி வந்தனாகிட்ட என்னை மாட்டிவிடற நான் எப்ப அவளுக்கு முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லி வைச்சேன்”

   

“இல்லைண்ணா நந்தினிக்காக பூஸ்ட் எல்லாம் கொடுத்தீங்க பாவம் வந்தனா கிச்சனுக்கு போனப்ப பரப்பரப்பா சமைச்சிட்டு இருந்தா டென்ஷனா வேற இருந்தா அதான் அவளுக்கும் நீங்க பூஸ்ட் கொடுப்பீங்கன்னு நினைச்சி அனுப்பிவைச்சேன்”

   

“போதும்டா போற வர்றவங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க நான் என்ன பொறுக்கியாடா நீ செஞ்ச காரியத்தால பாரு நந்தினி என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு போயிருக்கா உன்னை நான் கொல்லாம விடமாட்டேன் வா இப்பவே நந்தினிகிட்ட வந்து உண்மையை சொல்லு வா”

   

“எந்த உண்மைண்ணா”

   

”நீதான் வந்தனாவை என் ரூமுக்கு வரவழைச்சன்னு”

   

“யாரு நானா இல்லையே நான் நந்தினியை பார்க்கத்தான் கிச்சனுக்கு போனேன். அங்க வந்தனா இருந்தா நான் உங்களுக்காக காபி கேட்கவும் ரெண்டு பொண்ணுங்களும் வேகமாக காபி போட்டாங்க. அதுல நான் வந்தனாகிட்ட ஏதோ பேச்சு கொடுத்தேன். அவ்ளோதான் உடனே அவள் கிளம்பி உங்களை பார்க்க வந்துட்டா அப்புறம் நான் நந்தினியை கூட்டிட்டு உங்க ரூமுக்கு வந்தேன். இதுல நான் எந்த தப்பும் செய்யலையேண்ணா”

   

“உளறாதடா பாவி  முத்தத்தை பத்தியாவது சொல்லுடா”

   

“யார்கிட்டண்ணா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.