எல்லாமே முந்தாநாள் விட குறைவா இருக்கே”
“அதுக்கு காரணம் நீதான்”
“நானா நான் என்ன செஞ்சேன்”
“உன்னை யாரு அவள்கிட்ட வில்லங்கமா நடந்துக்க சொன்னது. நீ அவள்கிட்ட மட்டும் பாசமா இருக்கறத அவள் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு இந்த போட்டியையும் என்னையும் துச்சமா நினைக்ககூடாது பாரு அதான் குறைச்சேன்.”
“இது அநியாயம் தாத்தா நந்தினி செய்றத மட்டும் பாருங்க மத்தவங்க செய்றது உங்க கண்ணுக்கு தெரியலையா”
“யாரை சொல்ற நீ”
“வேற யாரு வந்தனாவைத்தான். இன்னிக்கு காலையில என்ன செஞ்சா தெரியுமா”
”என்ன செஞ்சா பொங்கல் செய்றதா சொல்லிட்டு போனா”
”தாத்தா சமையல்லயே இருக்காதீங்க வெளிய வாங்க தாத்தா”
“என்னடா விசயம் சொன்னாதானே தெரியும்” என தாத்தா கேட்க நடந்ததை சொன்னான் ரிஷி
”பார்த்தீங்களா தாத்தா அர்ஜூன் சொல்லாததையும் நான் நினைக்காததையும் அவளே நினைச்சி என்கிட்ட வந்து தப்பா நடந்துக்க பார்த்தா”
“அது தப்புதான் வந்தனா இப்படி நடந்திருக்க கூடாது. ஆனா நீ நந்தினிகிட்டயும் தப்பா நடந்துக்க கூடாது”
”நந்தினி என் காதலி. அவள் கூட இருக்கறது தப்பில்லன்னு தோணிச்சி இருந்தேன் ஆனா நான் என் லிமிட்லதானே இருந்தேன் பாவம் தாத்தா நந்தினி அவளுக்கு யாருமே இல்லை தனியாளு