(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”தெரியலையே இரு பார்க்கலாம்” என சொல்லும் போதே மற்றவர்களும் வந்து அமர்ந்தார்கள். ரிஷியின் பக்கத்தில் அர்ஜூன் அமர்ந்தான். அவனைப்பார்த்த வீட்டில் இருந்த மற்றவர்கள்

   

”என்ன அர்ஜூன் இங்க என்ன செய்ற” என மோகனசுந்தரம் கேட்க

   

”அதுவாப்பா தங்கச்சி ஞாபகமாவே இருந்திச்சி அதான் இங்க வந்துட்டேன் வேலைக்கு போறப்ப உங்க கூடவே வந்துடறேன்”

   

“ஏன்டா தங்கச்சியை விட்டு 2 நாள் இருக்க முடியலை எப்படித்தான் அவளை கல்யாணம் பண்ணி வைச்சி அனுப்பிட்டு தனியா இருக்கப்போறியோ“

   

“அதுக்கென்னப்பா தங்கச்சி கல்யாணம் ஆனதும் உடனே நான் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறேன்”

   

“அட உன் அவசரத்தை பார்த்தா ஆளை கூட பார்த்துட்ட போல” என்றார் கேசவமூர்த்தி

   

”ஆமாம்ப்பா ஆளு ரெடிதான் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான்”

   

“யார்டா அது”

   

“வெண்ணிலா”

   

“எந்த வெண்ணிலா”

   

“உங்க எதிரி மாணிக்க வேல் பொண்ணு”

   

“அடப்பாவி உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா” என பாட்டி கத்த

   

”கிடைச்சிருக்கும் என்னவோ வெண்ணிலாவா தேடி வந்தா விட முடியலை பாவம் அந்தாளுக்கு பிசினஸ் பண்ணவே தெரியலை வெண்ணிலாவும் ஒரே பொண்ணு அந்தாளு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.