போண்டாவும் அம்மியில் அரைச்ச தேங்காய் சட்னியும் செய்திருந்தாள்.
அதை தாத்தாவிற்கு பரிமாறினாள். திட்டமாக ருசியாக சரியாக இருக்கவும்
”இதுதான் பொங்கல் நல்லாயிருக்கும்மா நல்லா ருசியா இருக்கு சரி எல்லாருக்கும் பரிமாறு போ” என சொல்ல அவளும் பரிமாறினாள்.
ஆனால் சாப்பிட அமராமல் இருந்தவளைப்பார்த்த தாத்தா
”நீயும் சாப்பிடும்மா”
“இல்லை தாத்தா நான் சனிக்கிழமை விரதம் இருப்பேன் மதியமா சாமி கும்பிட்டு சாப்பிட்டுக்கிறேன்” என சொல்லவும் தாத்தாவும் சரியென தலையாட்டினார்.
அர்ஜூனோ நந்தினியிடம்
”சரிம்மா டிபன் சாப்பிடவேணாம் பால் குடிக்கலாமே”
“இல்லைண்ணா பச்சை தண்ணி பல்லுல படாம விரதம் இருக்கனும்”
“எதுக்கு இந்த விரதம்” என ரிஷி கேட்க
“சின்னப்ப இருந்தே சனிக்கிழமைன்னா விரதம் இருப்பேன் பூஜை விரதம்ன்னு வந்துட்டா விரதம் இருக்கறது பழகிடுச்சி என் பாட்டி எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க அவங்க சொல்படி செய்றேன்” என நந்தினி சொன்னாள்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்த உடன் தாத்தா பிடிவாதமாக தன் இரு பையன்களுடன் கருணாவையும் தினாவையும் கம்பெனிக்கு துரத்திவிட்டார்.
இன்று மதியத்திற்கு தாத்தாவே அந்த 4 பெண்களுக்கும் சாப்பாட்டுக்கான ஆர்டர் கொடுத்தார்.