(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“சரிங்க தாத்தா”

   

“சரி போ போய் சாப்பிடு பாவம் நீ வேற விரதத்தில இருக்க இப்பவே களைச்சி போயிட்ட போம்மா” என சொல்ல அவளும் அமைதியாக சென்று சாப்பிட ஆரம்பித்தாள்.

   

அனைவரும் சாப்பிட்ட பின் நந்தினி அர்ஜூனிடம் சென்றாள்

   

”அண்ணா இன்னிக்கு நடந்த விசயத்தால என்னோட மார்க் குறைஞ்சிருக்கும்ல”

   

“இன்றைய நாளை விட்டுத்தள்ளு நாளைக்கு கலக்கு” என்றான் அர்ஜூன்

   

”நாளைக்கு ஞாயிறு என்ன மாதிரி போட்டி தருவாங்கன்னு தெரிலைண்ணா”

   

“ம் பார்க்கலாம்மா நாள் போக போக போட்டிகளும் அதிகமாகும். இப்பவே தாத்தாவுக்கு உங்க திறமை என்ன கைபக்குவம் என்ன என எல்லாம் பார்த்துவைச்சிட்டுதான் உங்களால முடிஞ்சத செய்ற மாதிரி போட்டிகளை வைப்பாரு சரியா”

   

“சரிண்ணா நான் இப்பவே அத்தைக்கிட்ட போய் சாயங்காலம் செய்ய வேண்டிய டிஷ் பத்தி கேட்கறேன்.” என சொல்லிவிட்டு அவள் சுசித்ராவை தேடி சென்றாள். 

   

அர்ஜூன் ரிஷியை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றான். கடை கடையாக ஏறி ஏறி இருவரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

   

வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அந்நேரம் தாத்தாவிற்கு நந்தினி செய்த புது டிஷ்ஷை கொடுத்திருந்தாலும். அவரும் அதை சாப்பிட்டு குறையும் நிறையும் சொல்லிக்கொண்டிருக்க அர்ஜூன் நந்தினியிடம் வந்தான்

   

”இந்தாம்மா தங்கச்சி இதெல்லாம் சமையல் புத்தகங்கள் இது உனக்கு பயன்படும் இந்தா” என அவன் 10 புக் தர பின்னாடியே வந்த ரிஷியும் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.