வேண்டுமென்றே அவளும் பொங்கல் செய்திருந்தாள். 2 வகையான வெண்பொங்கலும் ரவா பொங்கலும் அதற்கு சட்னி, சாம்பார் கூடவே உளுந்து வடையையும் சுட்டு வைத்திருந்தாள். அதை தாத்தாவுக்கு பரிமாறவும் தாத்தா சிறிது சாப்பிட்ட உடனே அவருக்கு வெறுப்பு வந்தது
”வந்தனா என்ன இது” என கத்த அவள் பயந்து
”என்னாச்சி தாத்தா”
“என்ன ஆச்சா இந்தா நீயே சாப்பட்டு பாரு” என சொல்ல தன் பிளேட்டை அவளிடம் தந்தார். அவளும் அதை சாப்பிட்டுவிட்டு முகத்தை சுளித்தாள்.
”தாத்தா இது வந்து” என தடுமாறியவளை திட்டினார் தாத்தா
“போதும் இப்படியா எல்லாத்தையும் அள்ளி கொட்டி வைப்ப வீடு முழுக்க நெய் வாடை வந்தப்பவே நினைச்சேன். ஆனா அதுக்காக இவ்ளோ நெய்யா கொட்டறது சாப்பிட முடியலை எல்லாமே அதிகமாயிருக்கு மிளகு அதிகமாயிருக்கு பெருங்காயம் நெய்ன்னு ஏகத்துக்கும் அள்ளி கொட்டிவைச்சிருக்க அதோட இது என்னம்மா இது வடையா எதுக்கு இப்படி அவசரமா செஞ்சிருக்க பாரு உள்ள வேகவேயில்லை. நான் என்ன சொன்னேன் உன்கிட்ட ஒரு டிஷ் பண்ணு போதும்னு சொன்னேன். இருக்கற நேரத்தில நீ ஒரு டிஷ் செஞ்சிருந்தா இப்படியாயிருக்குமா இப்ப பாரு என்னாச்சின்னு நீ செஞ்ச டிஷ்ஷை உன்னாலயே சாப்பிட முடியாம போயிடுச்சி. இதை எப்படி நாங்க எல்லாரும் சாப்பிடுவோம் போம்மா போ இன்னிக்கு உன் சமையல் சரியில்லை இந்தா இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போ” என சொல்லவும் அவமானத்தில் தலை குனிந்தவள் தான் செய்ததை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றாள். அவள் சென்றதும் அடுத்து மிருதுளா தான் செய்ததை கொண்டு வந்தாள்.
பேருக்கு தோசையும் மிக்சியில் அரைத்த ஒரே ஒரு சட்னியும் செய்திருந்தாள். அனைவருக்கும் பரிமாறினாள். சரியாக இருந்தது. ஆனால் ருசி மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்ததை பற்றி தாத்தா எந்த விமர்சனமும் செய்யவில்லை.
அடுத்து நந்தினி வந்தாள். அவள் இன்று சனிக்கிழமை என்பதால் சக்கரைபொங்கலும் உளுந்து