அனைவரும் பாராட்ட அடுத்து மிருதுளா வந்தாள். நான்வெஜ் இல்லாமல் சாதாரண சமையல் செய்ய அவர் சொல்லியிருந்தார்.
அவர் சொன்ன மெனுபடி வத்தகுழம்பும் புடலைங்காய் கூட்டும் செய்திருந்தாள். அது கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லையென அனைவரும் சாப்பிட்டனர். அடுத்து நந்தினி மிகவும் தயங்கி தயங்கி வந்தாள்.
அவளுக்கு அவர் மேற்கத்திய பாணியில் சமைக்க சொல்லியிருந்தார். அவளால் அதை சரியாக செய்ய முடியவில்லை அதனால் தாத்தாவிடம் ஒரு வாய்ப்பை கேட்டாள்
”சாரி தாத்தா நீங்க சொன்ன டிஷ் நான் என் வாழ்க்கையில் சாப்பிட்டதேயில்லை. அதை எப்படி செய்யனும்னு கூட எனக்கு தெரியாது. சுசித்ரா அத்தை ரெசிபி சொன்னாங்க ஆனா எனக்கு சரியா வரலை எனக்கு நீங்க கொடுத்த 3 வாய்ப்புல ஒரு வாய்ப்பு இதுக்காக நான் பயன்படுத்திக்கிறேன் தாத்தா” என அவள் சொல்லவும் தாத்தாவிற்கு
”பரவாயில்லைம்மா போகட்டும் உனக்கு தெரிஞ்சதே நீ செய்தா எப்படி திடீர்ன்னு ரிஷிக்கு வேற ஏதாவது பிடிச்சிருந்தா அதை செய்ய சொல்லி உன் கிட்ட கேட்டு உனக்கு தெரியாம போனா என்னாகும் அதுக்குத்தான் சொல்றேன் எல்லாத்தையும் கத்து வைச்சிக்கறது நல்லது. நமக்கெதுக்கு நாம சாதாரணமா இருக்கலாம்னு நீயே உன்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைஞ்சி கிடக்காத. இந்த பரந்த உலகத்தில நீ ஒரு புள்ளிதான். நீயும் இந்த உலகத்தோட போராடனும். ஜெயிக்கனும் சின்ன சின்ன விசயம்தானே என்று அலட்சியமா இருந்தா உன் வாழ்க்கை பாழாயிடும். சரியா ஆமா ஓய்வு நேரம் எப்ப உனக்கு”
“சாயங்காலம் தாத்தா”
“நல்லது அப்ப சுசித்ரா இருக்காள்ல அவள்கிட்ட கேட்டு மேற்கத்திய உணவுகளையும் உனக்கு தெரியாத உணவுகளைப்பற்றியும் நீ தெரிஞ்சிக்க நீ வாய்ப்பு கேட்டதால அதுக்கான தண்டனை இதுதான். தினமும் சாயங்காலம் நீ ஒரு டிஷ் செய்யனும் அதுவும் உனக்கு தெரியாத டிஷ்ஷா இருக்கனும் அதுக்கு சுசித்ராகிட்ட செய்முறை கேட்டுக்க ஆனா நீயேதான் செய்யனும் புரியுதா”