Page 25 of 30
“ஒரு சின்ன பிரச்சனை”
“என்ன பிரச்சனை”
“அந்தாளு என்னை வெறுக்கறான்”
“யாரு”
“அதான் அவளோட அப்பன்”
“சரி”
“அதனால அவசரமா வெண்ணிலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறானாம்”
“ஓ அதான் பிரச்சனையா”
“ஆமாம் வாண்ணா வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வை”
“டேய் இது என்ன கம்பெனி டீலிங்காடா தீர்த்து வைக்க நீயேதான் பேசி புரிய வைக்கனும்”
“நான் பேசிட்டேன் அவள் பயப்படறா”
“யாரு வெண்ணிலாவா இதை நான் நம்பனுமா”
“அவள் மாறிட்டாள்ன்னா அங்க பாருங்க சுடிதார் போட்டிருக்கா” என சொல்ல அப்போதுதான் அவளை மேலும் கீழுமாக பார்த்தான். அவனின் இந்த பார்வையை பார்த்து அதிர்ந்தவன் ரிஷியைப்பார்த்து
”அண்ணா” என கத்தினான் அர்ஜூன்