குறைவாக்கிட்டீங்களே”
“ஆமாம்டா தெரியாத உணவாயிருந்தாலும் அதை திறமையா செஞ்சிருக்கா சோனா பழமையும் புதுமையும் புகுத்தியிருக்கா. இன்னிக்கு அவள் செஞ்ச காப்சிகம் புளியோதரை சூப்பர் தெரியுமா. புத்திசாலித்தனமா அவள் நெட்ல பார்த்து சரியா சமையல் செய்து முடிச்சிட்டா. ஆனா நந்தினி இதுல தோத்துட்டா அதுலயும் அவள் நான் கொடுத்த 3 வாய்ப்புல ஒரு வாய்ப்பை வேற இழந்துட்டா இனி இருக்கறது 2 வாய்ப்புதான். இந்த சமையல் சின்ன விசயம் இதை கூட அவளால கஷ்டப்பட்டு செய்ய முடியலைன்னா அப்புறம் வாழக்கையில அவள் எதுக்கும் கஷ்டப்படாம போய்டுவா. அதான் இப்படி மார்க் போட்டேன்”
“சரி அந்த வந்தனாவுக்கும் மார்க் குறைச்சிருக்கலாமே”
“குறைச்சிட்டேனே இங்க பாரு பணிவு ஒழுக்கம் ரெண்டுமே நீ காலையில சொன்ன காரியத்தை வைச்சி குறைச்சிட்டேன் பாரு”
“இருந்தாலும்”
“இங்க பாருடா நான் எல்லாருக்கும் பொதுதான் சரியா நான் இன்னிக்கு நடந்ததை வைச்சி மார்க் போட்டிருக்கேன். நாளைக்கு வேற மாதிரி கூட நடக்கலாம்” என சொல்லிவிட்டு சுசித்ராவை பார்த்தார்
”சுசித்ரா நான் சொன்னதை நீ செஞ்சிட்டல்ல”
”செய்ய சொல்லி வேலைக்காரங்க கிட்ட சொல்லிட்டேன் காலையில எல்லாம் தயாரா இருக்கும் ஆனா மாமா பாவம் மாமா அவங்க இன்னிக்கு நடந்த போட்டியிலயே அவங்க கஷ்டப்பட்டாங்க இதுல நாளைக்கு இன்னும் கஷ்டம் கொடுத்தா அவங்க இருப்பாங்களா இங்க”
“யார் யார் இருக்காங்களோ இருக்கட்டும் முடியாதவங்க போகட்டும் நீ அதைப்பத்தி கவலைப்படாத நான் சொன்னதை செய் போதும்” என தாத்தா சொல்ல
”அப்படி என்ன செஞ்சிருக்கீங்க தாத்தா” என ரிஷி கேட்க