(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”இந்தா இது உனக்கு அவசியம் தேவைப்படும்” என அவன் 3 புத்தகங்களை நீட்ட

   

”சமையல் புக்கா அத்தான்” என்றாள்

   

”இல்லை இது வேற புக்கு” என சிரிக்கவும் தாத்தா கத்தினார்

   

”டேய்”

   

”இல்லை தாத்தா இது அவளுக்கு தேவையான புக்குங்கதான்”

   

என சொல்ல தாத்தா நந்தினியிடமிருந்து புக்கை வாங்கி பார்த்தார்.

   

கடை கடையாக ஏறி ஏறி ரிஷி அவளுக்காக வாங்கிய புத்தகங்கள்

   

”புகுந்த வீட்டில் ஒரு மருமகளின் வேலைகள் என்ன, கணவரிடம் ஒரு மனைவி நடந்துக்கொள்ளும் விதங்கள்,  பெண்ணிற்கு தைரியம் எப்படி வரவழைப்பது” என எழுதியிருக்க  ரிஷியை பார்த்து

   

”என்னடா இது” என தாத்தா கேட்க

   

“இதெல்லாம் அவளுக்கு தேவையானது தாத்தா”

   

”அவளுக்கு மட்டும்தான் வாங்கிட்டு வருவியா ரிஷி மத்த பொண்ணுங்களும் பாவம்தானே“ என சுசித்ரா கேட்டுக்கொண்டே வர

   

”அவங்களுக்கு செய்ய எங்க வீட்லயே ஆட்கள் இருக்காங்க ஆனா நந்தினி பாவம் சித்தி அவளுக்கு நான் மட்டும்தானே இருக்கேன்” என கனிவாக சொல்லிவிட்டு நந்தினியை பார்க்க அவள் முகத்தில் சிறிய புன்னகை தோண்றி உடனே மறையவும் அதையே வெற்றியாக நினைத்தவன் அவளிடம் நெருங்கி வர அர்ஜூன் நிப்பாட்டினான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.