ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த விதத்தில் செய்ய சொல்லிவிட்டார். சோனா கூகுளில் சர்ச் செய்து தனக்கு தரப்பட்ட ரெசிபி எப்படி செய்வதென பார்த்துக்கொண்டாள். அதே போல் மிருதுளாவும் செய்தாள். வந்தனாவிற்கு பிரச்சனையில்லை அவளுக்கு தெரிந்த டிஷ் என்பதால் அவள் அப்போதே செய்ய தயாராகினாள். பாவம் நந்தினிக்கு அந்த டிஷ் பெயர்கள் கூட வாயில் நுழையாமல் போகவே அவள் பயந்தாள். அவளின் பயத்தை பார்த்த சுசித்ரா அவளுக்கு மெனு பற்றிய ஓரளவு செய்முறையை சொல்லிவிட்டார். அதை வைத்து அவளும் சமைக்க ஆரம்பித்தாள்.
இந்த 2 நாட்களில் அந்த பெண்கள் செய்த சமையலை வைத்து தாத்தா சோனாவிற்கு இந்திய முறைப்படி சமையலையும் வந்தனாவிற்கு கிராமபுற சமையலையும் மிருதுளாவிற்கு நான்வெஜ்ஜே இல்லாத சமையலும் நந்தினிக்கு மேற்கத்திய சமையலையும் செய்ய சொன்னார்.
4 பேரில் வந்தனா தவிர மீதி 3 பேருமே மிகவும் சிரமப்பட்டு சமைத்து முடித்தார்கள். இதற்காக அவர்கள் ஓய்வு கூட எடுக்காமல் டிபன் சாப்பிட்ட கையோடு வேலையில் இறங்கினார்கள். நந்தினிக்கு டிஷ் சரியாக வரவேண்டும் என்ற பதட்டம் ஒரு பக்கம் விரதம் வேறு இருந்ததால் உடல் சோர்வு ஒரு பக்கம் என அவளால் ஒழுங்காக சமைக்க முடியாமல் திண்டாடினாள்.
மணி ஒன்றாகியும் இன்னும் யாரும் சமைத்து முடித்த பாடில்லை. அதனால் தாத்தா இன்னும் ஒரு மணி நேரம் அதிகப்படுத்திக் கொடுத்தார்.
மணி 2 ஆனது அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்துவிட்டனர்.
முதலில் சோனா தாத்தா சொன்ன புளியோதரையை செய்திருந்தாள். பாவம் அந்த ஒரு டிஷ்க்காக அவள் ரொம்பவே கஷ்டப்பட்டாள் என்பது அவளது முகத்தை பார்த்த உடனே புரிந்துக்கொண்டார்கள் அனைவரும்.
தாத்தா சோனாவைப்பார்த்து
”சோனா வாம்மா வா நான் சொன்ன புளியோதரையை நீ செஞ்சிட்டியா”