(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பையன் ஐடிக்கு தாவிட்டான். அதான் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாணிக்கவேலை ஓரம்கட்டிட்டு அந்தாளு பிசினசை நான் எடுத்து நடத்தப்போறேன். உங்களுக்கு ஒரு எதிரி குறைஞ்ச மாதிரியிருக்கும்” என்றான் அர்ஜூன் அதைக்கேட்ட கருணா

   

”அர்ஜூன் ஒருவேளை உன் தங்கச்சி இந்த போட்டியில ஜெயிக்கலைன்னா நீ வெளியதானே மாப்பிள்ளை தேடனும்”

   

“அதுக்கென்ன இப்பவே கைவசம் டாக்டர் மாப்பிள்ளை இருக்காப்ல நான்தான் ரிஷிஅண்ணாவுக்காக பார்த்தேன்”

   

“யாரு அந்த டாக்டர் மாப்பிள்ளை” என சித்தி சுசித்ரா கேட்கவும்

   

”உங்க பேமிலி டாக்டர் கௌதம்தான்”

   

“அட நம்ம கௌதமா” என்றான் கருணா

   

”அவனேதான் என் தங்கச்சியை ஒரு தடவை வெளிய பார்த்திருக்கான். அப்ப இருந்து அவள்தான் வேணும்னு ஒரே அடம். சரி இங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு இங்க செட் ஆகலைன்னா கௌதம்க்கு கட்டி வைச்சிடலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என அர்ஜூன் சொல்லவும் தினகரன்

   

”எதுக்கு அவ்ளோ தூரம் கட்டிவைக்கற இந்த வீட்ல என்ன ஆளுங்களா இல்லை”

   

“யாரை சொல்ற” என அர்ஜூன் கேட்கவும் சுசித்ரா மெதுவாக

   

”என் பையன்கள் இருக்காங்கள்ல அதுல ஒருத்தனுக்கு கட்டிவைச்சிடு.”

   

“அட ஆமாம்ல இங்கயே 2 பேர் இருக்காங்க நான் மறந்துட்டேன் சித்தி அதுக்கென்ன முதல்ல இந்த போட்டி முடியட்டும் அப்புறம் தாத்தா முடிவு சொன்னபின்னாடி தங்கச்சி மனசுல யார் இருக்காங்களோ அந்த பையனுக்கே கட்டிவைச்சிடறேன்” என அர்ஜூன் சொல்லவும் உடனே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.