(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இங்கயும் அவளுக்கு யாரும் துணையில்லை. அதனால நான் இருக்கேன் பத்திரமா இருன்னு நிரூபிக்கதான் அவள் கூட அப்படி நடந்துக்கிட்டேன் மத்தபடி எந்த ஒரு கெட்ட எண்ணத்திலும் இல்லை” என சொல்ல அர்ஜூன் ரிஷியிடம்

   

”சரிண்ணா அவளுக்காக நீங்க பாவம் பார்த்தது போதும் அவள் அண்ணன் நான் வந்துட்டேன்ல இனிமே நான் அவளை பார்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

   

”தாத்தா இவன் தொல்லை தாங்க முடியலை இவனை நீங்க இப்படி கூப்பிடுறதா இருந்தா சொல்லியிருக்கலாமே நான் தூரமா இருந்திருப்பேனே இப்ப இவனையும் நான் சமாளிக்கனுமா”

   

“இத்தனை வருஷமும் ஜாலியா பொழுது போக்கினல்ல கொஞ்சம் வாழ்க்கைன்னா என்ன குடும்பம்னா என்ன மனுஷங்க புத்தி என்னன்னு தெரிஞ்சிக்க கத்துக்க அப்பதான் உன்னால குடும்ப வாழ்க்கையை சிறப்பா நடத்த முடியும்” என சொன்னவரிடம்

   

”சரி தாத்தா அதை நான் பார்த்துக்கிறேன் முதல்ல இன்னிக்கு வந்தனா செஞ்ச காரியத்துக்காக அவள் மார்க்கை குறைங்க”

   

“டேய் இது நேத்தைய மார்க் சீட்டுடா இன்னிக்கு நடக்கறதுக்கு நாளைக்குதான் நான் மார்க் போடுவேன் அப்ப வந்து பாரு இப்ப வா டைம் ஆயிடுச்சி சாப்பிடலாம் பொங்கல் வாசனை தூக்குது” என சொல்லிக்கொண்டே வெளியே செல்ல ரிஷிக்கு பற்றிக்கொண்டு வந்தது.

   

”அங்க என் ஆளு என் மேல தப்பான அபிப்பிராயத்தில இருக்கா அதைப்பத்தி யாருக்காவது புரியுதா சே” என நொந்துக்கொண்டே வெளியே சென்றான். உண்மையில் இன்று வீடு முழுவதும் நெய்யின் வாசனை தூக்கியடித்தது. ரிஷி சந்தேகத்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்துக்கொண்டு பக்கத்தில் இருந்த தாத்தாவிடம்

   

”ஏன் தாத்தா வீட்ல இருக்கறவங்களுக்குதானே சமைக்கறாங்க இல்லை கோயிலுக்கு படைக்கறாங்களா இப்படி நெய் வாசம் தூக்கியடிக்குது”

   

என கேட்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.